பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <ঙ্গ ר (கப்பல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஹெர்முஸ் தீவிலிருந்து அரபிக் குதிரைகளை வாங்கி வருவதற்குப் பயன்பட்டது என்பதையும், இன்னொரு கப்பல் சேது நாட்டுக் கடலில் எடுக்கப்பட்ட சங்குகளை ஏற்றிக்கொண்டு வங்க நாட்டுக்கு சென்றதையும் டச்சு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு போர்க்கப்பல் ஒன்று கிழக்கரை துறைமுகத்தில் கட்டப்பட்டு வந்தது என்றும் அதில் பொருத்த வேண்டிய பீரங்கி ஒன்றை கொடுத்து உதவ டச்சுக்காரர் மறுத்ததையும் அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேதுபதி மன்னர் பிற நாட்ட வருடனும், வர்த்தகபிரதிநிதிகளுடனும் தொடர்புகொள்வதற்கு பொது மொழியாக பாரசீக மொழியை பயன்படுத்த மரைக்காயர் அவர்கள் ஏற்பாடு செப்தார். ஏனெனில் அன்றை ய காலகட்டத்தில் வடக்கே இமயமலையிலிருந்து தெற்கே செஞ்சிக்கோட்டை வரை பரவியிருந்த முகலாயப் பேரரசின் ஆட்சி மொழியாக பாரசீக மொழி தொடர்பு இருந்து வந்ததே இதற்கு காரணமாகும். இதனால் சேதுபதி சமஸ்தானம் ஆவணங்களில் பாரசீக மொழிச்சொற்கள் கலந்து வழக்கிற்கு வந்தன. குறிப்பாக பசலி (ஆண்டு), கிஸ்தி (வரி). ஜப்தி(பறிமுதல்), குத்தகை (தவணை), ஹுதுரிதலைமை). தாக்கிது(கட்டளை), அர்ஜி(உத்தரவு), பேஸ்குஸ்(வருஷப்பணம்). தாக்கல்(அனுப்புதல்), மிராசு(பாத்யதை), ஹத்து(வரையறை), பாக்கி.( மிதப் பணம்), ஏலம் கஸ்வா(நகரில் ஒரு பகுதி). ராஜினாமா பதவி விலகல்), பொக்கிவு மீ(கரு ஆல ம) போன்றவை. மேலும் அரசு ஆவணங்களில் சேதுபதி மன்னர்கள் இந்துசமய பஞ்சாங்கத்தின் படி கலி யுக ஆண்டுகளையே (கி.பி.1780க்கு முன்பு வரை) பயன்படுத்தி வந்தனர். வள்ளல் சிதக்காதி அவர்களும், பிற வணிகர்களும் அப்பொழுது கேரள நாட்டுடன் வணிகத் தொடர்புகளை விரிவாகக் கொண்டிருந்த காரணத்தால் சேதுபதிமன்னர் ஆவணங்களிலும் اسـ