பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<চ செந்தமிழ் வள்ளல் சீதக்காதி கேரளதாட்டு கொல்லம் ஆண்டுக் கணக்கை பின்பற்றத் தொடங்கினர். கொல்லம் ஆண்டு என்பது இந்திய நாட்டில் அப்பொழுது வழக்கில் இருந்த கலியுக ஆண்டு விக்ரம ஆண்டு என்பன போன்று கேரள மக்கள் மட்டும் அதுவரை பயன்படுத்திவந்த ஆண்டுக்கணக்கு முறையாகும். இந்த கணக்கு | முறை ஆங்கிலப் பஞ்சாங்கத்தின் படி கி.பி.825 முதல் | தொடக்கம் பெறுவதாகும். இந்த ஆண்டில் கொல்லங்கோட்டில் ஆட்சிசெய்து வந்த சேரமான் பெருமான் என்ற மன்னர் அரபுநாட்டு இஸ்லாமிய வணிகர்களது தொடர்பு காரணமாக இஸ்லாமிய நெறிகளில் ஈர்க்கப்பட்டு மக்காவுக்கு புறப்பட்டுச்சென்ற நிகழ்ச்சியைக் குறிக்கும் முகமாக இந்த ஆண்டு முறை கேரளத்தில் புதிதாக கிபி.825 முதல் தொடக்கம் பெற்றது. - இவ்விதம் சேதுநாட்டு நலனுக்கும். சேதுபதி மன்னரது புகழுக்கும் பொருத்தமான பல பணிகளைப் பொறுப்புடன் மரைக்காயர் அவர்கள் மேற் கொண்டிருந்ததை வரலாறு என்றென்றும் விளம்பிக்கொண்டே இருக்கும். இவ் விதம சேதுபதி மன்னருக்கும, சீதக்காதி மரைக்காயருக்கும் இடையே நிலவிய நெருக்கமான தொடர்பும், தோழமையும் காரணமாக சேது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு தங்களது எதிர்காலம் பற்றிய நல்ல நம்பிக்கை ஏற்பட்டது. சிறப்பாக பல தொழில்களிலும் முஸ்லிம மக்கள் ஈடுபட்டு சேது நாட்டின் வளமைக்கு வழிகோலினர். இதனை நன்கு அறிந்த சேதுபதி மன்னரும் இந்த மக்களுக்கு அவர்களது வணிகத்தை சிறப்பாக நடத்துவதற்கு பல உனக்குவிப்புகளையுன் வழங்கினார் என்று குறிப்பிடத் தேவையில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக திருஉத்ரகோசமங்கை பகுதியில் இருந்த முஸ்லிமச் தறிக்காரர்களுக்கு அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினின்றும் விலக்கு அளிக்கப்பட்டதை திருஉத்ரகோசமங்கை செப்புப் பட்டயத்தில்" நமது காவல் اسـ حا אר