பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <@> - மாதவிப்பட்டு அணிவித்து கைகளிலும், தோள்களிலும் பொற்கடகங்களையும், பதக்கங்களையும் பூட்டி மகிழ்வார். இத்தகைய கவியரங்கங்களில் மன்னருக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்த சீதக்காதி மரைக்காயரும் தமிழ்ப்புலவர்களின் தமிழமொழித் தேர்ச்சியை யு மர், இலக்கண, இலக்கிய திறனையும் புரிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவார். இந்தக் கவியரங்கினையும், புலவர்களையும் நினைக்குக் பொழுது மரைக்காயர் அவர்களின் கற்பனை நபிகள் நாயகம்(பைல்) அவர்கள் காலத்திற்கே சென்று விடுக் இப்னு சுவாது என்னும் அரபிக்கவிஞர் நாயகம அவர்களைப் போற்றி மிகச் சிறப்பாக "கஸிதா" பாடியதை கேட்டு மகிழ்ந்த நாயகர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த போர்வையை அந்த புலவருக்கு பொன்னாடையாகப் போர்த்தி சிறப்புச் செய்தார். இவ்விதக் தாமும் ஏன் இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்களை நாயகர் அவர்கள் முன்மாதிரி யில் சிறப் புச் செப்து سنہ 42 کے ٣/ 5ی ஊக்குவிக்கக்கூடாது. என்ற உயர்ந்த எண்ணச் மரைக்காயரது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது. மேலும் மன்னரைச் சந்திக்க வந்த தலமலை கண்ட தேவர், அழகிய சிற்றம்பலக்கவிராயர், அமுத கவிராயர் போன்ற பெரும் புலவர்களது இலக்கிய விளக்கங்களை கேட்கும் பொழுதெல்லாச் சீதக்காதி மரைக்காயர் நெக்குருகி நெஞ்சமர் குழைந்து போவார். புலவர்களுக்கு எத்தகைய பேராற்றலையும், புலமையையும் இறைவன் அளித்துள்ளான் என எண்ணி வியப் படைவார். இவர்களைப் போன்ற தமிழ்ப்புலவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏன் இல்லை?. இந்தப் புலவர்களைப் போன்று முஸ்லி க்களுள் தமிழர் மொழியின் இலக்கண இலக்கியங்களை கற்றுத்தேர்ந்து தமிழச்சமுதாயத்தின் ஒரு அங்கமான முஸ்லிம் மக்களுக்கு இறைவனது திரு மறையையும். இறுதித்துதாது இனிய வழிமுறைகளையும் இலக்கியங்களாக வழங்கினால் என்ன? தாய் மொழியும், தமிழச்சமுதாயமும் சிறப்படையும் அல்லவா? حا