பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|<> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r இந்த வினாக்கள் தமிழிப் புலவர்களை சந்தித்து) உரையாடிய பிறகு சீதக்காதி மரைக்காயரது இதயத்தில் விடைகாண வேண்டிய வினாக்களாக எழுந்து நிற்கும். அதற்கான தீர்வுகளையும் மரைக்காயர் அவர்கள் சிந்தித்து வந்தார் . தமிழ்ப்புலவர்களை ஆதரித்து அவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களைப் படைத்து உதவுவதற்கு தக்க துணையாக அமைந்து உதவுவது என முடிவு செய்தார். இந்த முடிவு சீதக்காதி மரைக்காயரைப் பொறுத்த வரையில் மிகவும் எளிதான ஒன்றுதான். ஏனெனில் அவர் ஏற்கெனவே நாடி வந்தவருக்கு நலிவு தீர பொன்னும் பொருளும் வழங்கி மகிழும் வள்ளலாக விளங்கி வந்தார். ஈதல், அறம் என்ற இஸ்லாமிய கடமையை (ஜ காக், எலத.கா) பல ஆண்டுகளாக மிகச்சிறப்பாக நிறைவேற்ற வந்தார் அவர். ஆதலால் இஸ்லாமிய இலக்கியம் படைக்கு புலவர்களைப் போற்றிப்புரப்பது என்பது அவரது ஈதல் க.மையின் ஒரு பகுதியானதுதான். மேலும் சீதக்காதி மரைக்காயர் பிறந்து வளர்ந்த கிழக்கரையின் புனித மண் பல இஸ்லாமிய அரபி, தமிழ் வித்தகர்களுக்குக் பிறந்தகமாக விளங்கி பெருமை பெற்றிருந்தது. குறிப்பாக தமிழகத்தில் தமிழ் முஸ்லிம்கள் என்ற பிரிவினர் தமிழ்ச்சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக அமைந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. அவர்களது குடியிருப்புக்கள் பல கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டிலும் நிலை பெற்று அந்த மக்களது வாணிபமும் தங்குதடையின்றி வளர்ந்து வந்தது. தங்களது வாய் மொழியாக, வழிமொழியாக அவர்கள் வழங்கி வந்த அரபி மொழியினின்றும் மாறி, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு தமிழ் முஸ்லிம்களாக விளங்கி வந்தனர். ஆனால் ஏனைய தமிழச்சமூகத்தினரைப் போல தாய்மொழியாகிய தமிழுக்கு அணி செய்யும் இலக்கிய ஆற்றலை ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்தான் அவர்கள் பெற்றனர். இத்தகைய தாமதமான தேர்ச்சி நிலைக்கு