பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r- = - P டாக்டர் எஸ்.எம். கமால் <@ | s| இவ்விதன் சீதக்காதி மரைக்காயரை சந்திக்க வந்த பலவர்களில் குறிப்பிடத்தக்கவர் தொண்டை மண்டலத்து போற்களந்தை கிராமத்தைச் சேர்ந்த படிக்காசுத் தம்பிரான் என்பவராவார். இவர் பழுத்த சைவத்துறவி யு க், பெரும்புலவருமாவார். இவரது பாடல்கள் தொட்டாலும் கை னைக்கும் . என்று சிறப்பாக புகழப்பட்டவையாகும். அவர் இராமேஸ்வரம் தீர்த்தயாத்திரை செல்லும் வழியில் சோழ ண்ைடலத்திலேயே சேதுநாட்டில் சீதக்காதி என்றொரு வள்ளல் கிரந்து விளங்குவதாக கேள்விப்பட்டார். அதன் காரணமாக ஆர்வம் மேலிட கீழக்கரை வந்து சேர்ந்தார். வள்ளலது வள்ளன்மை:புக் வரையாது தமிழ்ப்புலவர்களுக்கு வழங்கி உதவும் பண்பினையும் நேரில் கண்டு பெருமிதமுற்றார். அவரது இதயத்தில் வள்ளல் சிதக்காதியின் கொடை அழுத்தமாக பதிந்து விட்டது. அதன் காரமணமாக அவரது ஏடுகளை அழுத்தி எழுது கோலிலிருந்து எழுந்த இனிய பாடல்கள் பல. அவைகளின் ஒன்றுதான் காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண் தொலைவில்,பன்னூல் ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம், அனுதினமும் ஈய்ந்து சிவந்தது மால் சீதக்காதி இருகரமே படித்துப் படித்து சுவைக்க வேண்டிய பாடல். வள்ளல் தேக்காதியின் கொடையை இனிக்க இனிக்க எடுத்துச் சோல்வது, இன்னும் இந்தப்புலவரைப் போன்று திருநெல்வேலி நமச்சிவாயப் புலவர், திருப்புவனம் கந்தசாமிப்புலவர் இப்படி வள்ளலின் கொடையிலே வடிவு பெற்ற கவிதைகள் பல. சீதக்காதி மரைக்காயரது விருப்பப்படி இஸ்லாசியக் தமிழ் இலக்கியங்களைப் படைப்பதற்கான முன்னோடி புலவராக எட்டையாபுரச் உமர்கத்தாப் புலவர் முன் வந்தார். | | } جمے