பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (சில ஆண்டுகளுக்கு முன்னர் சீதக்காதி மரைக்காயருக்கு நடந்த י திருமண நிகழ்ச்சியை சிற்றிலக்கியமாக படைத்தார். இந்த சிற்றிலக்கியம் இப்பொழுது வள்ளல் சீதக்காதி திருமண வாழ்த்து என வழங்கப்படுகிறது. தமிழகத்தின் வரலாற்றையும் கலை, பண்பாடு, மரபுகள் போன்றவற்றை சித்தரிப்பதில் நாட்டுப்புற இலக்கியங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன. இந்த இலக்கியமும் அந்த வகையைச் சேர்ந்தது. தமிழக வரலாற்றிற்கு துணைபுரியும் இந்த வகை இலக்கியங்களில் அதுவரை பாடப்பெற்று வழக்கில் இருந்தவை 1. இராமப்பையன் அம்மானை, 2. ராஜதேசிங்குகதை ஆகும். இந்த இலக்கியங்கள் கி.பி.பதினேழாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. மறவர் சீமையின் மீது தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக மதுரை மண்டலத்தைச் சேர்ந்த 72 பாளையக் காரர்களது பெருக் படையுடன் திருமலை நாயக்க மன்னரது தளபதி ராமப்பையன் சேது நாட்டிற்குள் சென்று இராமேஸ்வரர் தீவுச்சண்டையில் கி.பி. 640 -ல் இரண்டாம் சடைக்கன் சேதுபதியுடன் பொருதியதை இராமப்பையன் அச்மானை விவரிக்கிறது. இதனைப் போன்றே கி.பி.1686 - ல் இந்தியப் பேரரசின் தலைவரான ஒளரங்கசீப் செஞ்சிக் கோட்டையை கைப்பற்றுவதற்காக தமது தளபதி ஜுல்பிகார் கானை அனுப்பி வெற்றி கொண்டது ராஜா தேசிங்கு கதையாகும். இவைகளினின்றும் வேறுபட்டு அரசியல் அல்லாது வள்ளல் சீதக்காதி மரைக்காயரை பாட்டுடைத் தலைவராகக் கொண்டது சீதக்காதி திருமணவாழத்து ஆகும். இந்த இலக்கியம் தனிப்பட்ட மனிதர் ஒருவரை மையமாகக்கொண்டு புனையப்பட்டிருந்த பொழுதினும் இந்த நூல் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் திருமணவிழா சம்பந்தமாக தமிழக முஸ்லிக்கள் மேற்கொண்டிருந்த பழக்கவழக்கங்கள், ஆடை அணிகலன்கள், மகளிரது அணிமணிகள் ஆகியவற்றை மிகத்தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய (கண்ணிகளால் தொடுக்கப்பட்டுள்ளது. ار