பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் - <@> r இவ்விதமர் களிப்பெய்திய கற்புடை மகளிர் மணமக்களை) “செல்வம் தழைப்பீர் சிறப்பாக வாழ்ந்திருப்பீர்' என வாழத்தி குளவையிடுகின்றனர். தமிழ்நாட்டு மரபை ஒட்டி மணமகனும், மணமகளுக்கு தமது கையால் மங்கல நாண் பூட்டுகிறார். பல்லாங்குழி முதல் தந்தச் சிவிகை ஈறாக பல்வேறு பொருள் வரிசைகள் வழங்கப்பட்டன. “பொன்னுமணியும் பொருந்துதல்போ லேபொருந்தி எந்நிலமுந் தான்வாழ எப்போதும் வாழ்ந்திருப்பீர்! குன்றில் விளக்காய்க் குலவிளக்காய் ஒங்கிநிலை நின்ற பெரும்புவிமேல் நீடுழி வாழ்ந்திருப்பீர்! என புலவரும் மணமக்களை வாழ்த்தி இந்த இலக்கிய வாழ்த்தை முடிக்கிறார். சங்க இலக்கியங்களின் சாயலில் கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம் ஆகியவைகளின் கருத்தையும் அழகையும் நினைவூட்டும் சிறந்த இலக்கியமாக இந்த வாழ்த்து திகழுவதுடன் முந்தைய தமிழச் சமுதாயத்தில் நிலவிய பழக்கவழக்கங்கள், வணிகத் தொடர்புகள், அணிணிைகள், விட்டுப்பொருட்கள், வெடி வானங்கள், போர்க்கருவிகள் போன்றவைகளின் விவரங்களை வழங்குகின்ற கருவூலமாகவும் உள்ளது. ஆங்காங்கு கண்ணிகளில் அரபிச்சொற்கள் தமிழச்சொற்களாக உருப்பெற்று ஒலிக்கின்றன. நூலாசிரியர் கிழக்கரையில் வாழ்ந்தவர் ஆதலின் இஸ்லாமிய வழக்கில் உள்ள வட்டாரச் சொற்களும் விரவி வந்துள்ளன. பொதுவாக இந்த வாழத்து சிற்றிலக்கியமாக மட்டுமன்றி, மொழிஇயல், வரலாறு, கலைகள் பற்றிய ஆய்வாளர்களுக்கு அரும் விருந்தாக உதவும் அரிய கையேடாகவும் விளங்கி வருகிறது. இந்த நூலினைப் போன்றே வள்ளல் சீதக்காதி மரைக்காயரது பண்புகளையும், புகழச்செய்திகளையும் தெரிவிக்கும் இன்னொரு நூல் சீதக்காதி மரைக்காயர் மீதான கோவை நூலாகும். துரதிரஷ்டவசமாக இந்த நூலின் படிகள் (தமிழ் மக்களுக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆனால்