பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<@> - செந்தமிழ் வள்ளல் சீதக்காதி ,- # io oi is H o ויר வள்ளல் காலத்தில் நடந்ததான செஞ்சிக்கோட்டைப் போரைத் தொடர்ந்து எழுதப்பட்ட மற்றொரு நூல்தான் சீதக்காதி நொண்டி நாடகமாகும். இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான மதுரை ஒடுங்காப்புலி என்ற கள்ளன் செஞ்சிக்கோட்டைக்குச் சென்று அங்குள்ள ஆற்காடு நவாபின் பாசறையிலிருந்து குதிரை ஒன்றை கவர்ந்த பொழுது பிடிக்கப்பட்டு ஒரு கையும், ஒரு காலும் வெட்டப்பட்டு வேதனையுற்ற நிலையில் தற்செயலாக அங்கு சென்ற கீழக்கரை சீதக்காதி மரைக்காயரின் முகவர் மாமு நெப்னாப் பிள்ளையின் அனுதாபத்திற்கு ஆளாகி அவரது உதவியுடன் செஞ்சியிலிருந்து கிழக்கரை வந்ததாகவும், அங்கு சீதக்காதி மரைக்காயரது அன்பையும், அனுதாபத்தையும் பெற்று இமாச் சதக்கத்துல்லாற். அப்பாவிடம் கலி மாச் சொல்லி , இஸ்லாத்தை ஏற்று மக்கா சென்று இறையருளால் வெட்டப்பட்ட கையும் காலும் வளரப்பெற்று இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக இந்த நாடகத்தின் போக்கு அமைந்துள்ளது. இந்த நாடகத்தைப் புனைந்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை. என்றாலும் அவர் அளித்துள்ள இரண்டு செய்திகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. முதலாவதாக பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் பெரும்பாலான ஊர்களை நினைக்கும தரை வழிப் பாதைகள் இல்லாத பொழுது செஞ்சிக்கோட்டையிலிருந்து கிழக்கரைக்கு உள்ள பாதை எந்த ஊர்களின் வழியாகச் சென்றது என்பதை ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். செஞ்சிக் கோட்டையிலிருந்து வாலிகண்டபுரம், அரியலூர், புதுக்கோட்டை, திருமெய்யம், மனமேல்குடி, தொண்டி, திருப்பாலைக்குடி, வாடி, தேவிப்பட்டினர், இராமநாதபுரம், சக்கரக் கோட்டை கண்மாய், உப்பளம், மோர்க்குளம், பாலையாறு, மணவச்சேரி, சிங்காரத்தோப்பு வழியாக (கிழக்கரைக்கு அந்தப் பாதை வந்தடைந்ததாகத் தெரிகிறது. اس