பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானிடம் அளவற்ற மரியாதை சீதக்காதி மரைக்காயரது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் கிழக்கரை புனித இமார் சதக்கத்துல்லாற். அப்பா அவர்கள் ஆவார். செல்வச்சீமானான சீதக்காதி மரைக்காயர் தமது ον/τόσαθαν அனுபவங்களுக்கு அப்பாற் பட்ட அரசியல் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு சேது நாட்டுக்கு மிகச்சிறந்த நிர்வாகத்தை வழங்குவதற்கு சேதுபதி மன்னருக்கு உதவியாக இருந்தார் என்பதை முன்னர் பார்த்தோர். அடுத்து அவரது இளமைப் பருவம் முதல் நன்கு அறிந்திருந்த இமாச் சதக்கத்துல்லாஹற் அப்பா அவர்களுடன் மரைக்காயருக்கு நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டது பெரும்பாலும் கி.பி. 1680 க்கு | பிற்பட்டதாகக் கொள்ளலாம். தமிழக இஸ்லாமியரது வரலாற்றிலே ஆன்மீகத்தை வளர்த்த அரும்பெரும் பணியாளர்களில் இமார் அவர்கள் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார். கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு இறுதியில் பாண்டிய நாட்டில் தீன் நெறியைப் பரப்பியவர் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹிது வலி அவர்கள். அடுத்து திருச்சியில் அடக்க மீ ار