பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K32 - செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r மேலும் மிகச்சிறந்த வள்ளலாகவும், வணிகராகவுசி வாழந்த அவர் ஒரு நல்ல ஆன்மீகவாதியாகவும் இஸ்லாமியராகவும் வாழவதற்கான வழிமுறைகளை இமார் அவர்கள் வகுத்துக் கொடுத்ததின் காரணமாக மரைக்காயர் அவர்கள் திருமறையின் கட்டளைகளையும், இறைத்துதரின் வழிமுறைகளையும் பற்றி சிறப்பாக ஒழுகி வந்தார் என்பதை உமர்கத்தாப் புலவரது கவிதை வரிகள் சான்றாக அமைந்துள்ளன. அனந்தரிலும் அல்லாவி னானைமற வாதபிரான்” "செப்பரிய ஹ88 வண்மை செய்கின்ற சக்காத்து முப்பது நோன்பும் முடிக்குந் தபோதனன்காண்” 'அய்யா ருபில் நோன்பும் ஆசுறா நன்னோன்பும் நையாமல் ஆசார நன்னோன்பு நோற்பவன் காண்” இறைவனது கட்டளையான திருமறையை தவறாது பற்றி நடந்து வந்ததின் காரணமாக வள்ளலது இதயத்தில் இறை உணர்வு விஞ்சி நின்று எந்நேரமும் இறைவனை மறக்காதவர் என்பதைக் குறிக்க புலவர் அவர்கள் சீதக்காதி மரைக்காயரை உறக்கத்திலும் கூட உயர்ந் தோனாகிய இறைவனது கட்டளையை மறக்காதவர் என்பதை மேலே கண்ட கவிதை வரிகளில் மிகவும் அருமை யாக புலவர் அமைத்துக் காட்டியுள்ளார். இமாச் அவர்களது அணுக்கத்தொண்டராகிவிட்ட சீமான் சீதக்காதி மரைக்காயருக்கு ஒரு புதுவிதமான சிந்தனை துளிர்த்தது. வாணிபச்செழுமையின் காரணமாக கீழக்கரையில் முஸ்லிம் மக்களது பெருக்கம் அதிகமாகிக் கொண்டிருந்ததால் அவர்களுக்குப் பயன்படும் வகையில் இறையில்லம் ஒன்றை நிர்மாணித்தால் என்ன என்பதுதான் அந்த சிந்தனை. செல்வத்தில் செம்மாந்து நின்ற சீதக்காதி மரைக்காயருக்கு (இத்தகைய பள்ளியை அமைப்பது என்பது சிரமமான செயல் اسا