பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் வள்ளல் சீதக்காதி ר சோழப்பேரரசு நிலைகுலைந்த பின்னர் கி.பி.பதினான்காச் நூற்றாண்டு முதல் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய விஜய நகரப் பேரரசு கடல் வாணிய முயற்ச்சிகளுக்கு எவ்வித ஆக்கமும் அளிக்கவில்லை. இதனால் தமிழர்களது கடல் வாணிபம் வளர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் ஐரோப்பாக்கண்டத்தில் பதினெட்டார் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் அந்தக் கண்டத்தில் உள்ள சில நாட்டு மக்கள் கீழை நாடுகளுடன் வியாபாரத் தொடர்புகள் ஏற்படுத்தும் முயற்சியில் நமது நாட்டிற்கும் வந்தனர். அவர்களில் முதலாவதாக வந்த போர்ச்சுக்கீசியர் தமிழர்களின் அடியொற்றி கீழை நாடுகளுடனான கடல் வாணிபத்தை பெருக்கியதுடன் இலங்கையையும் இந்தோனோசியத் தீவுகளையும் தங்களது ஆதிக்கத்தின் கீழ கொண்டுவந்தனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் அவர்களது ஆளுநர் ஒருவரும், இந்தோனோசிய ஜாவா தீவில் பட்டேரியா நகரில் அவர்களது கவர்னர் ஜெனரலும் கி.பி.1658 வரை தலைமையகங்களைக் கொண்டிருந்தனர். அடுத்து தமிழகத்துடன் வாணிபத் தொடர்புகளைக் கொள்வதற்காக வந்தவர்கள் டச்சு, ஆங்கில, பிரெஞ்சு நாட்டவர்கள். இப்பொழுது வள்ளல் சீதக்காதியுடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாரைப் பற்றிப் பார்ப்போம். கிரேட் பிரிட்டன் என்றும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து என்று ம வகைப்படுத்தி கூறப்படும் நாட்டைச் சேர்ந்தவர்களும் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவர்களும் ஆங்கிலேயர் எனப்பட்டனர். இவர்களில் பிரதானமான வணிகர்கள் கூட்டாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார் என்ற பெயரில் கிழக்காசிய நாடுகளில் வாணிகர் மேற்கொள்வதற்கு ஆயத்தமானார்கள். அப்பொழுது இங்கிலாந்து நாட்டின் பேரரசியாக விளங்கிய اسـ كحا