பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <> (முதலாவது எலிசபெத் மகாராணியாரிடர் பெற்ற பரிந்துரைக் ר கடிதத்துடன் சர் தாமஸ் மன்ரோ என்பவர் கி.பி. 600-ல் இந்தியப் பேரரசரான ஜஹாங்கீரை ஆக்ரா நகரில் சந்தித்தார். அவரும் ஆங்கில பிரதிநிதியின் வேண்டுகோளுக்கிணங்கி குஜராத் மாநிலத்தில் துரத்திலும், வங்க மாநிலத்தில் கல்கத்தாவிலும் பண்டகசாலைகளை அமைத்து அவர்கள் வணிகம் தொடங்குவதற்கு அனுமதி வழங்கினார். நாளடைவில் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார் தங்களது வாணிபத்தை வலுப்படுத்திக் கொண்டதுடன் தங்களது நடவடிக்கைகளையும் விரிவு படுத்தினர். ஆந்திரக் கடற்கரையோர நகரான மசூலிப்பட்டினத்திலும் பின்னர் தமிழ்நாட்டில் சென்னைப்பட்டினத்திலும் பண்டகசாலை அமைத்தனர். சந்திரகிரி மன்னரிடம இருந்து கிரயர் பெற்ற சென்னை கடற்கரையில் ஒரு பண்டகசாலை பாதுகாப்பு நிலைகளுடன் கி.பி 7689 ல் நிர்மாணித்தனர். இங்கு அந்த குழுவின் நிர்வாகியாக பணியேற்று வணிகத் தொடர்புகளை மேற் கொண்டிருந்தவர் கவர்னர் என அழைக்கப்பட்டார். தொடக்கத்தில் இந்த வியாபாரக்குழுவினர் வாசனைப் பொருட்களை குறிப்பாக மிளகை கொள்முதல் செய்து இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்சாரமும் குளு குளு வசதியு ம கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலத்தில் வெளிநாட்டவரின் பிரதான உணவான இறைச்சியை பதப்படுத்தி வைத்துக்கொள்வதற்கு மிளகு மிகவும் இன்றியமையாததாக இருந்தது. இந்த வணிகத்தில் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நல்ல வருவாயுக் கிடைத்தது. அப்பொழுது தமிழகம் முழுவதும் மிளகு விற்பனையின் ஏகபோக ஆதிக்கர் பெற்றிருந்தவர் கிழக்கரையைச் சேர்ந்த நமது வணிக வேந்தர் ஷெய்கு அப்துல் காதர் என்ற பெரியதம்பி மரைக்காயர் ஆவார். இவரை ஆங்கிலேயரின் ஆவணங்களில் (பெரியதம்பி-மக்கான்-என குறிப்பிடப்பட்டுள்ளது.)