பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (கி.பி. 7686க்கும் 1690க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் மரைக்காயரைப் பற்றிய ஒரு சில ஆவணங்கள் மட்டுமே சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவைகளில் 4.7.1687 நாளிட்ட பெரிய தமiபி மரைக்காயர் அவர்கள் புனித ஜார்ஜ் கோட்டை கவர்னர் கைபோர்டு அவர்களுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதத்தின் ஆங்கில மொழி நகலின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். இதே போன்று நலம் அமைய விரும்புகின்றேன். உரிய நேரத்தில் தாங்கள் எழுதிய கடிதம் | கிடைக்கப்பெற்று மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன். மிளகைப் பொறுத்தமட்டில், நான் சென்னைக்கு கொண்டு வந்தால் நீங்கள் ஒரு கண்டி அளவுக்கு 15 பகோடா பணம் தர வேண்டும். உங்கள் ஆட்கள் இங்கு வந்து எடுத்துக் கொண்டால் கண்டிக்கு 12 பகோடாக்கள் தர வேண்டும். நமது முன்னைய ஒப்பந்தத்திற்கு இணங்க கூடுதல் விலைக்கு மிளகை வாங்கி, நான் பயன்பெறும் வகையில் மேலும் அதிகமான விலைக்கு உங்களுக்கு விற்க மனம் இடந்தரவில்லை. ஏனெனில் என்றும் விரும்புகிறேன். எனக்குச் சொந்தமான கிடங்கு உள்ள பார்வதிசேகரநல்லூரில் வாரம் ஒருமுறை நடக்கும் பெரிய சந்தையில் 150 முதல் 200 பொதிமாடுகள் சுமை மிளகு வணிகத்திற்கு வருகிறது. ஒவ்வொரு பொதியும் ஏறத்தாழ 5 பண மதிப்புடையது. 150 பெரிய பணத்திற்கு 20 சுமை வாங்கலாம். இது 30 சக்கரம் அல்லது 16 பகோடாக்களுக்கு சமமானது. 2 பொதி மாட்டுச்சுமை மிளகை தேவிபட்டினத்திற்கோ அல்லது கிழக்கரை துறைமுகத்திற்கோ அனுப்பச் செலவு 1 கண்டிக்குரிய தொகையாகும். உங்களின் திருப்திக்கு ஏற்றாற்போல் மிளகின் எடையும், தரமும் நான் தங்களின் நன்மதிப்பையும், அன்பையும் அரவணைப்பையும் ایر י