பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் - ~ அமைந்திருக்கும். வேண்டுமானால் உங்கள் ஆட்களை அனுப்பி சரிபார்த்துக் கொள்ளுங்கள். நான் ஏற்கனவே தெரிவித்தபடி கொள்முதலுக்கும், ஏற்றுமதிச் செலவுக்கும் நீங்கள் முன்பணமாக பாதி தொகையைக் கொடுத்தால் மீதித் தொகையை நான் போட்டு வாங்கி அனுப்பி வைக்கின்றேன். பாதிப் பாரத்தை உங்கள் கப்பல்களிலும் மீதிப் பாரத்தை எனது கப்பல்களிலும் அனுப்பி வைக்கின்றேன் அல்லது முழுவதையும் என்னுடைய கப்பல்களிலேயே வழக்கமான கட்டணத்தில் அனுப்பி வைக்கவா? இந்த மிளகு பாரத்தை அனுப்பி வைப்பது உங்களின் நட்பையும் நல்லெண்ணத்தையும் பெறுவதற்காகவே தவிர வேறு எதற்குமில்லை. மற்றைய வணிகர்கள் இந்த வணிகத்தைப் பணம் பெறுவதற்காக மட்டுமே செய்வார்கள். நானோ உங்கள் நட்பையே | பெரிதாக எண்ணுகிறேன். இந்தப் பகுதியில் தற்போது குழப்பம் நிலவுகிறது. குழப்பம் திர்ந்தபின் என்னுடைய கப்பல்களில் சரக்கு அதிகம் அனுப்புகிறேன். இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இங்கு நிலவி வரும் குழப்ப நிலையிலும், மழையில்லா வறட்சியாலும் நெல்லின் விலை அதிகமாக இருப்பதால், நான் 30 அல்லது 40 படகுகளை நெல்லைப் பெறுவதற்கு அனுப்பி வைக்கின்றேன். அரிசியைப் பெற்று வந்து உங்களிடம் ஒப்படைக்க இரண்டு கப்பல்களை அனுப்பி உள்ளேன். இந்தக் கடிதத்திலிருந்து சீதக்காதி மரைக்காயர் ஆங்கிலேயருக்கு கீழக்கரை துறைமுகம் வழியாகவும், தேவி பட்டினர் துறைமுகம் ον%) ανα και ωνώ சென்னைப்பட்டினத்திற்கு அனுப்பப்படும் ஒரு கண்டி மிளகின் அடக்க விலை என்ன ஆகும் என்பதையும் அதைப்போன்றே சென்னையில் வழங்குவதற்கு அனுப்பப்படும் அரிசிக்கு அடக்க விலை எவ்வளவு ஆகும் என்பதையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். இந்தக் கடிதத்திலிருந்து வெளிநாட்டவரான ஆங்கிலேயர் அப்பொழுது தமிழகத்தில் வாணிபத் துறையில் ஒப்பாரும மிக்காரும் இல்லாது விளங்கியவர் சீதக்காதி (மசைக்காயச் ஒருவரே என்பது புலனாகிறது. -است