பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@_ செந்தமிழ் வள்ளல் சீதக்காதி י (போர்ச்சுக்கீசியர்கள் கடல் வாணிபத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். பலவேற்காடு என்றும் புலிக்காட் என்றும் வழங்கப்பட்ட பவழவேற்காட்டில் தங்களது வியாபார பண்டகசாலைகளை அமைத்த பொழுது போர்ச்சுக்கீசியருக்கும் இவர்களுக்கும் பலத்த மோதல்கள் ஏற்பட்டன. அப்பொழுது சென்னைப்பட்டணத்தை அடுத்த மைலாப்பூரிலும், சாந்தோமிலும், நாகப் பட்டிணத்திலும் வலுவாக நிலைபெற்றிருந்த போர்ச்சுக்கீசியர் இவர்களை அந்தப்பகுதியிலிருந்து விரட்டியடிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கென போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து மூன்று முறை கப்பல் படைகள் சாந்தோமுக்கு அனுப்பப்பட்டு புலி க்காட்டிலும், நாகப் பட்டினத்திலும் இருந்த டச்சுக்காரர்களுடன் கடல் போர்கள் நடைபெற்றன. போர்ச்சுக்கீசியருக்கு ஆதரவாக அப்பொழுது செயல்பட்ட விஜயநகர பேரரசரையும், தஞ்சாவூர் அரசரையும் அவர்களது ஆதரவை விலக்கிக்கொள்ள செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொண்டனர். போர்ச்சுக்கீசியர்களது தளபதிகள் சுயநலமிக்கவர்களாகவும். அவர்களே goof) ανασό இந்தப்பகுதிகளில் சொந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாலும் தீவிரமான முறையில் டச்சுக்காரர்களது வாணிகத்தொடர்புகளை அவர்களால் அழிக்க முடியவில்லை. இதன் காரணமாக டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களை தமிழகக் கடற்கரையில் மட்டுமல்லாமல் இலங்கையிலிருந்து போர்ச்சுக்கீசியர்களை இறுதியாக வெற்றி கொண்டனர். டச்சுக்காரர்கள் வடக்கே புலிக்காட் நாகப்பட்டிணம், ஆகிய சோழ மண்டலக் கரையிலிருந்து நகர்ந்து தெற்கே மன்னார் வளைகுடாப்பகுதிக்கும் வந்து சேர்ந்தனர். இந்தப் பகுதி மறவர்சீமை மன்னரான சேதுபதிக்கும். மதுரை நாயக்க மன்னருக்கும் உரிமை உடையதாக இருந்தது. சேதுபதிகளது நாட்டைப்பொறுத்த வரையில் அங்குள்ள விளைபொருளான நெல்லின் பல வகைகளும் குறிப்பாக بـ - حا