பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <@ பெரியதம்பி மரைக்காயர் தமது முழு அ தி க ச ர தி ைத ப் ད།༽ பயன்படுத்தி வன்முறையில் அவர்களிடமிருந்து பணத்தை வசூலித்தது டச்சுக்காரர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. கி.பி.1698 வரை புதிதாக கிறிஸ்தவ மதத்தை ஏற்ற இந்த பரவ மக்கள் போர்ச்சுக்கீசியரது குடிமக்களாகவே இருந்து வந்தனர். டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கிசியரிடமிருந்து அந்தப்பகுதியின் ஆதிக்கத்தை மேற்கொண்டபொழுது பரவரின மக்களது புதிய காவலராக மாறினர். அத்துடன் அந்தப்பரவ இனமக்களின் ஆதரவில்தான் அவர்களது முத்து வாணிபம் அமைந்திருந்தது. ஆதலால் அவர்களது விசுவாசமான ஊழியர்களிடம் பெரியதம்பி மரைக்காயர் வன்முறையைப் பயன்படுத்தியது அவர்களுக்கு மேலும் வெறுப்பை வளர்த்தது. மற்றொரு நிகழ்ச்சியும் டச்சுக்காரர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. தேவிப்பட்டினத்தில் குடியிருந்த “கார்னலிஸ் ஹீ" என்ற டச்சுக்காரரை பெரியதம்பி மரைக்காயரது ஆட்கள் அடித்துத் துன்புறுத்தியதனால் அவருக்கு மரணம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் பெரியதம்பி மரைக்காயருடனான வாணிபப் போட்டியை விட கூடுதலான வகையில் மரைக்காயர் மீது அருவருப்பும், சினமும் அடையச்செய்தது. இதற்கிடையில் கி.பி.1690-ல் சேதுபதி மன்னருடன் இரண்டாவது ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்ட போது பெரியதம்பி மரைக்காயரையும் அவரது குடும்பத்தைாரையுமர் மன்னார் வளைகுடாவின் வடக்குப் பகுதியான "POINT CALIMERE " ல் இருந்து தெற்கே கன்னியாகுமரி வரையான கடல் எல்லை வரை சேதுநாட்டு அரசியல் விவகாரங்களிலிருந்து அகற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. டச்சுக்காரர்களது இந்த வேண்டு கோள் அந்த உடன்பாட்டில் காகித அளவிலேயே இருந்துவிட்டது. சேதுபதி மன்னர் வழக்கம்போல் பெரியதம்பி மரைக்காயருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய மதிப்பை வழங்கி வந்தார். இந்த ஒப்பந்தத்தின் முடிவு சேதுபதி மன்னருக்கு மட்டும் சாதகமாக இருந்தது. ஏனெனில் சேதுநாட்டுக்கு குதிரை வாங்கச்சென்ற \