பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.வம். கமால் <@ (எனக் குறிப்பிட்டிருந்தனர். இதிலிருந்து டச்சுக்காரர்களுக்கு) பெரியதம்பி மரைக்காயர் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை ஒரு புற மீ இருக்க அவரது வாணிபச் செல்வாக்கு க், பெருந்தன்மையு மர் எந்த அளவில் இருந்தது என்பதை ஊகிப்பதற்கு உதவுகிறது. டச்சுக்காரர்களது பிரதான இலக்கு சேதுபதி சீமையில் வாணிபம் நடத்துவது என்பதை மட்டுமல்லாமல் சேதுபதி சீமையின் பிரதான துறைமுகமான Ο Λrώ Ο οδy یےs/ret( یn//r62o day அவர்களது ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இதனை அவர்கள் சேதுபதி மன்னருடன் கி.பி.1685, கி.பி.1690-ல் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு உடன்பாடுகளின் மறைமுகப் பொருளாக அமைந்திருந்தது. தெற்கே கன்னியாகுமரி, துரத்துக்குடி பகுதிகளிலிருந்து வடக்கே நாகப்பட்டினம், சென்னைப்பட்டினம் ஆகிய துறை முகங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் நடுத்தர வகையான கப்பல்களும், தோணிகளும் பார்பன் கால்வாய் வழியாக செல்வதினால் பயன காலமும், பயணத்திற்கான செலவு ச் மிகவும் குறைவு ஆவதை உணர்ந்திருந்த ஆங்கில பிரெஞ்ச் வணிகர்கள் தங்களது கப்பல்களை கொழும்பு துறைமுகத்துக்கும். பின்னர் இலங்கை நாட்டை சுற்றிக் கொண்டு நாகப்பட்டினம், சென்னை செல்வதற்கு பதிலாக குறுக்கு வழியாக பார்பன் கால்வாய் வழியாக செல்வதையே விரும்பினர். பார்பன் கால்வாயை சேதுபதி மன்னரது அனுமதி பெற்று தங்களது கட்டுப்பாட்டிற்கென வைத்துக் கொண்டால், சுங்கம், தீர்வை ஆகிய வகைகளில் தங்களுக்கு பெருத்த ஆதாயம் ஏற்படும் என்பதும் அதை விட பிற நாட்டவர்களது வாணிபப் பொருட்கள் அவைகள் போய்ச் சேருமிடம் ஆகிய வாணிபம் சமீபந்தப்பட்ட விவரங்களை தெரிந்து கொண்டு தங்களது வாணிகத்தைப் பெருக்குவதற்கும் பார்பன் கால்வாயின் பிடிப்பு மிகவும் உதவும் என்பது அவர்களது கணிப்பு.