பக்கம்:செம்மாதுளை .pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 11

சுக்கு நேராகப் பாய வந்த எத்தனையோ வேங்கைகளை அரண்மனை சிறுவயல் காட்டில் குத்திக் கொன்றிருக்கிறான் வாளுக்குவேலி. பலபேரைக் கொன்று,பல எருதுகளைத் தின்று சுற்றுவட்டாரத்தையே பீதிகொள்ள வைத்திருந்த பதினாறடி வேங்கையொன்றைத் தம் தம்பியின் உதவியால் இரண்டு மணி நேரம் போரிட்டு வீழ்த்தி, எதிரிகளையும் நிலை கலங்க வைத்திருக்கிருன். ஆனலும் வாள் கோட்டைத் தலைவன் அன்றைய தினம் சிந்தித்தான்- இதற்குப் புஜபலத்தைப் பிரயோகித்து என்ன பயன் பெற முடியும் என்று சந்தேகித்தான்! அப்படி என்ன கவலையோ தேவனுக்கு?

அதுவரை கல்லாய்ச் சமைந்திருந்த மரங்கள் கொஞ்சம் அசைய ஆரம்பித்தன. குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. தேவன் வழக்கமாகப் போட்டுக் கொள்கிற பச்சைக் கம்பளியைத் தோளில் போட்டுக்கொண்டு நீள அரிவாளுடன் கீழே இறங்கி வந்தான். தேவனின் காலடி ஓசை கேட்டு, கோட்டைக் காவலர்கள் எழுந்து நின்றார்கள். நாய்கள் வாலாட்டிக்கொண்டு தேவனிடம் ஓடிவந்து குதித்தன. 'டே கவுதாரி'- தேவன் கவலை தோய்ந்த குரலில் காவல்காரனை அழைத்தான்.

கவுதாரியும், சின்னக் கோழியும் ஓடிவந்து குற்றவாளிகளைப்போலக் கைகட்டி நின்றார்கள். பத்து வருஷ காலமாக விசுவாசத்துடன் கோட்டைக் காவலர்களாகவே வேலைபார்த்து வரும் அவர்கள் இருவருக்கும் தேவன் கொடுத்த பட்டப்பெயர்கள் தான் கவுதாரி என்பதும், சின்னக்கோழி என்பதும்! அவர்களும் அந்தப் பட்டப் பெயர் சொல்லி அழைப்பதையேதான் விரும்பினர்கள். ஏன்? இவர்கள் இருவரும் சுறுசுறுப்பானவர்கள். அதனல் தான் அந்தப் பெயர்களே அவர்களுக்குக் கொடுத்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/12&oldid=495088" இலிருந்து மீள்விக்கப்பட்டது