பக்கம்:செம்மாதுளை .pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 12

கிறேன்' என்று தேவன் அடிக்கடி விருந்தாளிகளிடம் சொல்வதுண்டு. தேவன் மதுரைக்குப் போயிருந்த சமயத்தில் கோட்டையில் ஏதும் திருட்டுப் போய்விட்டதோ என்று அஞ்சிய காவலர்களுக்குப் பயத்தினால் உள்ளம் அடித்துக் கொண்டிருந்தது. மேலும், எப்போதுமே நெற்றி மட்டக்கம்போடு வெளியில் வரும் தேவன் அன்று திருப்பாச்சேத்தி நீண்ட அரிவாளுடன் வாசலுக்கு வந்திருந்தான்.

'ஏண்டா கவுதாரி!'

'எசமான்!”

"இந்த ஒலை எப்ப வந்தது?"

"நேத்திக்கு நடுச் சாமத்துக்கு வந்ததுங்க! ரொம்ப ரகசியமுன்னு சொன்னாங்க. கல்யாணி நாச்சியாரு பேரைச் சொல்லித்தானுங்க ஓலையைக் குடுத்தாரு.'

"வழக்கப்படி ஆளுக்கு அடையாளக் குறி பார்த்துக் கொண்டாயா?"

"கன்னத்திலே ஒரு ஆறாத புண்ணு. கழுத்திலே ஒரு கரும்புள்ளி. அவ்வளவு தானுங்க!" "பேரு கேட்டாயா?" கவுதாரி ஒன்றும் பேசவில்லை. ஆனால் மன்னித்து விடும்படி அவன் விழிகள் கெஞ்சின.

"மடையன்! மடையன்!!" என்று கடிந்து பல்லைக் கடித்துக்கொண்டே தேவன் மறுபடியும் உச்சி மாடத்திற்குப் போய்விட்டான். இப்போது முன்னைக் காட்டிலும் வேகமாக, புறங்கையைக் கட்டிக்கொண்டு நடக்க ஆரம் பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/13&oldid=495090" இலிருந்து மீள்விக்கப்பட்டது