பக்கம்:செம்மாதுளை .pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34

அதை யானைக் கர்வமாக நெஞ்சில் ஒரு மூலையில் கட்டிப் போட்டுவிட்டான். அண்ணன்மார் இருவரையும் இவ்வளவு துாரம் தன் கணவன் கேவலப்படுத்தியும் அதை யெல்லாம் இதயத்தில் தாங்கிக்கொண்டே குடும்பம் நடத்துகிருள் தன் சகோதரி என்பதிலே வாளுக்குவேலிக்கு ஒரு திருப்தி: தனிமையிலிருக்கும்போது அவன் விடும் பெருமூச்சு கல்யாணியின் இல்லறத்தைப் பற்றியதாகத் தானிருக்கும்: இயலாமையை ஒப்புக்கொள்ளும் கட்டத்திலும், இன்ப நினைவின் இறுதி அத்தியாயத்திலும் தான் பெருமூச்சு சாத்தியமென்ருல் தேவன் விட்ட பெருமூச்சுகளுக்கு ஒரு போதும் இயலாமை காரணமாக இருந்தது இல்லை. எல்லாம் தங்கச்சியின் வாழ்க்கை இன்பத்தை நினைத்து பெருமிதங்கொண்ட நீள் மூச்சாகத்தானிருக்க வேண்டும். இப்படிச் சிலநாள்! ஆனால் ஆதப்பன் கோபம் அடங்கவே இல்லை: . . * .

திருக்கோஷ்டியூர் சுந்தராம்பாள்

திருக்கோஷ்டியூர் பாகனேரிக்குப் பக்கத்திலுள்ள ஒரு பிரசித்தி பெற்ற விஷ்ணுஸ்தலம். சிங்கப்பெருமாள் சத்துருவைச் சம்காரம் செய்த இடம் என்பார்கள் ஒரு சிலர் நாராயணமூர்த்தி மாடோட்டி வேடத்தில் வந்து நிற்க இடம் கேட்டு, பின் இருக்க இடம் கேட்டு, முடிவில் படுக்க இடம் கேட்டுப் பள்ளிகொண்டு பெருமாள் எழுந்தருளியிருக்கும் புண்ணிய rேத்திரம் என்பர் வேறு சிலர் இப்படிப் பல கதைகளுண்டு. திருக்கோஷ்டியூரைப் பற்றி. இராமானுஜாச்சாரியார் சரித்திரத்திலிருந்து, இங்கி லாந்து வணிக ராஜாக்களை விரட்டியடித்த வீரர் மருது பாண்டியர் வரலாறுவரை திருக்கோஷ்டியூர் பல நூல்களில் இடம் பெற்றிருக்கிறது. - - -

ஊர் கவர்ச்சி மிகுந்தது: அரண்மனைபோல் அழகான கோயில் கோபுரத்தின் உச்சியில் தங்கக் கலசம், மதிலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/35&oldid=565949" இருந்து மீள்விக்கப்பட்டது