பக்கம்:செம்மாதுளை .pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

ரத்தில் வில்வமரங்கள்: கோயிலைச்சுற்றி நான்கு வசந்த வீதிகள் ஏராளமான பொருட் செலவில் எழில் மேவும் சிற்ப வேலைப்பாடுகளோடு செய்யப்பட்ட சித்திரத் தேர். அது மருது பாண்டியர்களால் செய்து வைக்கப்பட்டது: தெற்கு ரத விதியில், சிவகங்கைச் சீமையின் ராணி வேலு நாச்சியார்,வெள்ளையர் படையை எதிர்ப்பதற்கு அமைத்துக் கொண்ட கற்சாந்துக் கட்டிடம் அதைப் போலவே கீழ ரத வீதியில் ஒர் அந்தப்புரம்: ஆலயத்தில் நடைபெற வேண்டிய ஆறுகால பூசைக்கு அன்றலர்ந்த மலர்கள் உடனுக்குடன் தேவைப்படும். என்பதற்காகக் கவனத்தோடு கண்காணிக்கப்பட்ட நந்தவனங்கள்! கோயிலுக்கு எதிரே ஒரு பச்சைத் (நிறம்) தண்ணிர்க் குளம். திருப்பாற்கடல் என்று அதற்குப் பெயர். அதையொட்டி ஒருகல் மண்டபம்! தீர்த்த மண்டபம் என்பர் அதை அந்தச் சிங்காரச் சிற்றுாரி லிருந்து கூப்பிடு தூரத்திலிருப்பதுதான் தாசி சுந்தராம் பாளின் மாதவ மாளிகை. திருக்கோஷ்டியூர் கோயில்

மூல விக்ரகத்திற்கு மாதவன் என்றும் ஒரு செல்லப் பெயர் உண்டு என்பதால்தான் சுந்தரி அவளுடைய மாளிகைக்கு மாதவமாளிகை என்று பெயர் வைத்திருந்ததாகச் சொல்லு கிரு.ர்கள்:

ஆள் மட்டத்திற்கு அழகான சுற்றுச் சுவர்: சுவரின் உட்புறத்தில் மைசூர் பூச்செடிகள். மாலை வேளையில் காற்ரு . இருக்கத் தென்னங் கீற்றுக் கொட்டகைகொல்லைப் பக்கத்தில் சின்ன நீர்த் தடாகம், அதில் எப்போதும் இரண்டு சிங்கார வெள்ளை வாத்துக்கள்: ஆடவரின் கண்பட்டால் அரைக் கணத்தில் கல்லாவர் என்பார்களே தேவலோகக் கன்னியரைப்பற்றி, அவர்களைப் போலவே தான் சுந்தரியும் தன்னந்தனியளாய் அந்த மாளிகையில் ஏகாந்த வாழ்வை நடத்திக்கொண்டிருந்தாள்;

தேவதாசியா? அவள் புன்னகையைக் குத்தகைக்கு விடுபவளாயிற்றே, பொன்னுக்கும் பொருளுக்கும் தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/36&oldid=565950" இலிருந்து மீள்விக்கப்பட்டது