பக்கம்:செம்மாதுளை .pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 செம்மாதுளை


                              வாக்குமூலம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் கீர்த்தியுடன் வாழ்ந்துவரும் கள்ளர் வகுப்பாரிடையே நடைபெற்ற ஒரு கலவரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். எப்போதாவது அதை நூல் வடிவாக்க வேண்டுமென்று அன்றே முடிவு செய்தேன். அந்த ஆசையின் துாண்டுதலால் அந்தக் கலகத்தைப்பற்றி, நிகழ்ச்சி நடைபெற்ற ஊரைச் சார்ந்த எனது நண்பர்கள், அவர்களின் வயோதிகப் பெற்ேறார் முதலியோரிடம் விசாரித்தேன். அறிந்தவற்றைச் சொன்னர்கள். குறித்துக் கொண்டேன். இன்னும் கண்கூடாக விளங்கும் சில அழியாச் சின்னங்களைக் காட்டினர்கள். பூரித்துப் போனேன். எழுதுவதற்கு உற்சாகம் பிறந்தது. அதன் பிறகு கள்ளர்கள் பற்றிய நூல்கள் பலவற்றைத் தேடிப் பிடித்துப் புரட்டிப் பார்த்தேன். அதில் திரு.ந.மு. வேங்கட சாமி நாட்டார் எழுதிய 'கள்ளர் சரித்திரம்' என்ற நூல் எனக்குப் பெரிதும் பயன்பட்டது.

திரு.நாட்டார் அவர்கள் அகநானூற்றுச் செய்யுளை முன் வைத்து, வேங்கடமலையில் வசித்தோரும் அஞ்சா நெஞ்சு படைத்தவருமாகிய கள்ளர்கள் கள்ளர் பெருமகன் தென்னன் என்ற பாண்டியனால் தென்னட்டுக்கு அழைக்கப் பட்டனர் என்றும், படைத் தலைவர்கள், தந்திரிமார் என்று இவர்கள் அழைக்கப்பட்டனர் என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார், கள்ளர்கள் நிறைந்திருந்த நாடுகளில் கள்ளர்களே 2016 — I

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/6&oldid=495076" இலிருந்து மீள்விக்கப்பட்டது