பக்கம்:செம்மாதுளை .pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 7

நேரத்தில், கதையை எழுதும் எழுத்தாளன், ஒரு பொதுச் சொத்தைக் கூடுதல் குறைச்சலின்றி சகோதரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் பஞ்சாயத்தார் நிலையில் நின்று பெரு மூச்சு விடுகிறான். கதையிலே சம்பந்தப்படாதவர்கள், கதையைப் படித்துவிட்டுச் சொல்லழகைக் குறிப்பிட்டுப் பாராட்டுவார்கள்; பொருளழகைச் சுட்டிக் காட்டித் தட்டிக் கொடுப்பார்கள். ஆனால், அந்தக் கதையில் வரும் சம்பவங்களுடனே, அல்லது கதாபாத்திரங்களுடனே ஈடுபாடுடையவர்கள் எங்காவதிருந்தால், எங்கே குறையிருக்கிறது என்றுதான் பார்ப்பார்கள். இதையெல்லாம் எண்ணித்தான், மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு, நடந்ததை நடந்தபடி எழுதத் துணிந்தேன். அதனால் எனக்கு ஒரு பக்கம் சாதகமும் ஏற்பட்டிருக்கிறது; இன்னொரு பக்கம் பாதகமும் ஏற்பட்டிருக்கிறது. நடந்ததை நடந்தபடி எழுதியிருப்பதால் தகராறுக்குக் காரணமானவர்கள் யார், குற்றம் யார் பக்கம், என்பதை வாசகர்களையே தீர்மானித்துக் கொள்ளச் செய்ய முடிந்தது. இது எனக்குச் சாதகமாய்ப் போய் விட்டது. ஆனால், உண்மையைக் கூட்டாமல் குறைக்காமல் சொல்லியிருப்பதால் சில கதாபாத்திரங்கள் என்ன ஆனர்கள் என்பதைத் தெளிவாக விளக்க முடியவில்லை. நாவல் படித்துச் சுவை கண்டோர் இதை ஒரு குறையாகத் தானே கருதுவார்கள். இது எனக்குப் பாதகமல்லவா!

இந்தக் கதை, மருது பாண்டியருக்கும் வெள்ளேயருக்கும் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில்-அதாவது இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நடந்திருப்பதாக நிகழ்ச்சிகள் நமக்குச் சொல்கின்றன. மிகப்பெரிய யுத்தம் ஒன்று வெள்ளையருக்கும் மறவர் திலகங்களான மருது சகோதரர்களுக்கும் நடந்து கொண்டிருக்கும் போது, பாகனேரியிலும், பட்டமங்கலத்திலும் நடைபெற்ற இந்தத் தகராறு ஒரு உள்நாட்டுக் குழப்பமாகவே கருதப்பட்டதால் முக்கியத்துவம் பெருது போய்விட்டது.

இன்று அரசியல் துறையில் தலைதுாக்கி நிற்கும் இரண்டு நாடுகளுக்கிடையே இப்படியொரு வெட்டுக் குத்து அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/8&oldid=495078" இலிருந்து மீள்விக்கப்பட்டது