பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொகையுரை

இலக்கியமாமணி

பி.வி. கிரி

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமிப்பிள்ளை அவர்கள், காலங்காலமாய் எழுதிக்குவித்த செம்மொழிச் செல்வங்களெல்லாம் இன்று காணக்கிடைக்கவில்லையே என்று ஆய்வாளர்களும், தமிழார்வலர்களும் வருந்துகின்ற நிலையை அறிந்தேன். இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்ற ஆவல் பலர் உள்ளங்களிலும் எழுவது இயல்புதானே?

உரைவேந்தரின் திருமகனார் துணைவேந்தர் டாக்டர் ஒளவை நடராசன் அவர்கள், தந்தையாரின் கட்டுரைகளையெல்லாம் நாம் தேட வேண்டுமே என்று தம் நெடுநாளைய எண்ணத்தை ஆர்வத்தோடு என்னிடம் தெரிவித்தார்கள்.

‘அவற்றையெல்லாம் தேடி எடுப்பது சற்றுக் கடினமான செயல் என்றாலும், அதனைத் தாங்கள்தான் செய்ய வேண்டும்' என்று அன்போடு வேண்டினார்கள். பின்னர் உரைவேந்தரின் கட்டுரைகளைத் தேடித் தொகுக்கும் பணியில் அயராது முயன்றேன்.

உரைவேந்தரின் கட்டுரைத் தேனைப் பருகப் போகிறோமே என்று உளம் மகிழ்ந்து ஒரு வண்டாக நூலகமெனும் பூங்காக்களுள் நுழைந்தேன். ‘கொங்குதேர்வாழ்க்கை' என்பதற்கு அப்போதுதான் பொருள் புரிந்தது. சில இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. என்றாலும் மனம் சோராமல் மறைமலையடிகள் நூலகத்துக்குச் சென்றேன். அங்கே அந்தத் தமிழ்ப் புதையல் இருப்பது அறிந்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

உரைவேந்தரின் திருவுருவத்தை நான் நேரில் கண்டதில்லை. ஆனால், அந்த அழகிய எழுத்துக்களிலே அவர் திருவுருவத்தைக் கண்டேன். காலையில் கட்டுச்சோற்றுடன் தமிழ்க் கடலாம் மறைமலையடிகளின்

திருப்பெயரால் அமைந்த அரும் பெரும் நூலகத்துக்குச் சென்று, அங்கேயே

9