பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108
செம்மொழிப் புதையல்
 


“செல்இனி, சென்று நீ செய்யும் வினை முற்றி
அன்பு அறமாறி யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ! என்று வருவாரை
என்திறம் யாதும் வினவல்; வினவில்
பகலின் விளங்கும்நின் செம்மல் சிதையத்
தவலருஞ் செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு”

இனி நீ செல்க, சென்று அங்கே செய்யும் வினையை முடித்துக்கொண்ட பின்பே இங்கிருந்து வருவோரைப் பார்த்து அன்பு இல்லாமையால் என்னால் துறக்கப்பட்ட தலைமகள் நலத்தை அறிவீர்களோ? என்று வினவுக; வினைமுடியு முன்பு அவர்களை வினவ வேண்டா. வினவில், சூரியன்போல் தலைமை கொண்டு விளங்கும் உமது தலைமை சிதைந்துவிடும். வேறு வகையால் கெடுதற்கில்லாத உமது செய்வினையும், முடிவடையாதபடி அவலம் உண்டாயினும் உண்டாகிவிடும்.

தலைவன் :- ஏன்? எனக்கு விளங்கச் சொல்.

தோழி :- என் தோழி நின் பிரிவாற்றாது, இறந்தாலும் இறந்து விடுவாள். (புதர் மறைவிலிருக்கும் தலைவி வெளிப்படுகிறாள்)

தலைவ்ன் :- இதோ, திருமகள் வருகின்றனளே....(சென்று இரு கைகளையும் பற்றி) நீ எப்போது இங்கு வந்தாய்?

தலைவி :- காதல, இதுவரையும் என் தோழி சொன்னதைக் கேட்டீர்களா?

தலைவன் :- இனி அதை நினையேன். உலகு முழுவதும் ஒருங்கு வருவதாயினும் இனி உன்னைப் பிரியேன். வா. இவ்வியற்கைக் காட்சியைக் கண்டு இன்புறலாம்.

இயற்கைக் காட்சி இன்ப ஊற்று.