பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

111


வில்லையே" என்கின்றாள். வேங்கையடியில் வீற்றிருக்கும் மெல்லியல்.

தோழி :- அம்மா, நாமே அவனை வினவினால் என்?

மெல்லி :-(அச்சத்தோடு) அவனையா? அந்த வேலனையா?அவனை என்னென்று வினவுவது? -

தோழி :- முருகனது வேல் அவன் கையிலுள்ள வேல். அவன் ஆடும் வெறியாட்டு அம் முருகன் பொருட்டு. அவ்வேல் அறிவின் வடிவம், ஆகவே, அவனுக்கு நல்லறிவும் உளதாயிருக்கும். அதனால், அவனது அறிவு வெளியாகுமாறு நாமே அதனை வினவுவோமே?

மெல்லி :-எப்படி வினவுவது?

தோழி :- எப்படியா? அப்படித்தான்?

மெல்லி :- எனக்கு விளங்கவில்லையே?

தோழி :- ஏன் விளங்கவில்லை? அன்று நடந்ததை நினைவில் கொண்டு மறைந்த சொற்களால் அவனை வினவுவது.

மெல்லி :-(மயங்கிய பார்வையுடன்) என்று நடந்ததை?அதனை நன்றாகத் தான் சொல்.

தோழி :-அன்று நாம் தட்டை கொண்டு குருவியோட்டி விளையாடி யிருந்தோமன்றோ?

மெல்லி :-ஏன், நாம் இன்றும்தான் அவ்வாறே செய்கின்றோம்.

தோழி :- அன்று நம் தட்டை முறிந்து போகவே, இதோ இம்மூங்கிற் புதரிலிருந்து மூங்கிலொன்றை யறுத்துத் தட்டையொன்று செய்தோமே, அஃதேனும் நினைவிலிருக்கிறதோ?

மெல்லி :-(புன்முறுவலுடன்). ஆம். பெரு முழக்கம் செய்து கொடிய ஓசையை உண்டுபண்ணிற்றே, அந்தத் தட்டை செய்தோமே, அன்றா?