பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
123
 


அணிசெய்தலே யன்றித் தொழிற்கண்முட்டறுக்கும் துணைக் கருவியாதலும் வலியுறுத்தும். இவ்வாறு இவை பயன்படுத லோடு அமையாது இடையூறுகளால் கலங்கித் திகைப்பார்க்குக் கலக்கந்தீர்க்குமருந்துமாய் உண்மைப் பொருளறிதற்குதவி செய்தல் குறித்தே பேக்கன் என்னும் புலவர் பெருமகனார் இவை அணியாதலே யன்றித் தொழில்முட்டிறுத்தும், கலக்கத்திடைத் தெளிவுபிறப்பித்தும் நலம்செய்கின்றன என்னும் கருத்துறக் கூறினர். 3. இப்பேக்கன் என்பவரே பிறிதோரிடத்தில் இப்பொருண்மொழிகளை உப்புங் கழிகட்கு ஒப்புமை கூறி, கழியிடத்து உப்பினைப்பெற்று, வேண்டுமிடத்துக் கலந்து சுவை யாக்கிக் கோடல்போல், இவற்றினிடத்து மெய்ப்பொருள் கண்டு வேண்டுமிடத்துத் துணைசெய்துகொள்ளலாமென்றார். ‘முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின், நஞ்சு முண்பர் நனிநா கரிகர்’ என்பது நற்றிணைக்கண் வருவதோர் (355) பொருண்மொழியாகும். இதனை ஆசிரியர் திருவள்ளுவனார் “பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க, நாகரிகம் வேண்டு பவர் என்ற குறளின்கண் (50) பெய்து கொண்டனர். மேலும், “நீரின் றமையா வுலகம் போலத், தம்மின் றமையா நந்தயத்து” என்ற அதன் கனநீரின்றமையாது உலகம் என்பது ஒரு பொருண்மொழி (நற்.1) இதன்னயும் திருக்குறளில் “நீரின்றமையா துலகெனின் யார்யார்க்கும், வானின் றமையா தொழுக்கு என்னுங் குறளின்கட் (குறள்.20) பெய்து கொண்டனர். இந்நற்றிணைப் பாட்டில் “தாமரைத் தண்டா துரதி மீமிசைச் சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை: “எனவருவது ஒரு பொருண் மொழியாகும். இதன் பொருள் - தாமரைத்தாதினையும் சந்தனத்தாதினையும் ஊதி அச்சந்தனம்ரத்திற் செய்த வள்ளத்துள் வைத்தவிடத்து அவை இடத்து நிகழ்பொருளும் இடமுமா யியைந்து தம் பெரும்ைபுலப் படுத்தினாற்போல உயர்ந்தோர்

3. “These wise sayings, said Bacon, the auther of some of the wisest of them, are not only for ornament but for action and business, having a point or edge, whereby knots in business are pierced and discovered. And he applauds Cicero’s description of such sayings as salpits, that you may extract salt out of them and sprinkle it where you will” - John Morley. -