பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
127
 


அவர்தம் கல்வி, கடைப்பிடி முதலியவற்றிற்கேற்ப மக்களால் மதிக்கப்படுவனவாம். மற்று, எளியதாய உரை நூல் எழுதும் ஒருவன், ஒன்றிரண்டாய பொருண்மொழிகளைத் தன் நூலிடையே தொடுப்பனேல் அவன் முனிவரையொப்பக் கருதப்படுகின்றான். இதுவே அப்பொருள்கட்கும் இதற்குமுள்ள வேறுபாடு. .

“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்

தாமறிந் துணர்க என்ப மாதோ.” -

- (நற். 116) என்றும்,

“நெடிய மொழிய கடிய ஆர்தலும்

செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வ மென்பது சேர்ந்தோர் புன்க ணஞ்சும் பண்பின் மென்கட் செல்வம் செல்வமென் பதுவே” -

(நற். 210) என்றும்,

“தீயும் வலியும் விசும்பு பயந்தாங்கு

நோயும் இன்பமும் ஆகின்று மாதோ.” . (நற். 294) என்றும் வரும் பொருண்மொழிகளால், இவற்றை யாக்கிய பெரியோர் களும் நல்லிசைச் சான்றோர் வரிசையுள் இடம் பெறுவராயினர். இத்தகைய பொருண்மொழிகள் இலவாயின், இராமாயணமும் சிந்தாமணியும் பிறவும் நின்றுநிலவுதல் யாங்ஙனம் அமையும்?. மேனாட்டார் ப்ளுடார்க் (Plutarch) என்பவரை மிக மேம்பட வுரைப்பது, கதை கூறுவதினும் மக்களையும் அவர்தம் பண்பினையும் வெளிப்படுத்துவதே சீரிய கருத்தாய்க் - கொண்டமையே யென்பர். இளங்கோவடிகள், ‘அரசியல் பிழைத்தோர்க் கறம் கூற்றாவது உம், உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பது உம், சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதி கார மென்னும் பெயரால், நாட்டுவதும் யாமோர் பாட்டுடைச்