பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
129
 


‘நெறியி னிங்கியோர் நீரல கூறினும்

அறியா மையென் றறியல் வேண்டும்” (சிலப்-10) என்றும் “நல்லது செய்த லாற்றீ ராயினும் - அல்லது செய்த லோம்புமின் அதுதான் எல்லாரு முவப்ப தன்றியும் நல்லாற்றுப் படுஉ நெறியுமா ரதுவே”

(புறம் - 195) என்றும், “செல்வத்துப் பயனே யிதல், 1 *

துய்ப்பே மெனினே தப்புந பலவே.” என்றும் வருவனவற்றாலறிக.

மக்கள் நாடோறும் இயற்றும் குற்றங்களையும் நலங்களையும் எடுத்துக்காட்டி அவற்றை நீக்குதலையும், போற்றுதலையும் செய்யும் பொருண்மொழிகள் நிறைந்த நூல்கள் வேண்டும். ஆங்கிலேயர்கள் மக்களின் ஒழுக்கங்களையும், அவர் செய்யும் பிழைகளையும் இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துக்காட்டும் பொருண்மொழிகளைப் புணர்த்தற்கு கதை வடிவங்களையே கருவியாகக் கொண்டிருக்கின்றனர். இவை பெரும்பான்மையும் எளிய நடையில் வழுவில்லாத இனிய தீஞ்சொற்களாலாக்கப்பட்டுப் பேரிலக்கியங்கட்குள்ள அமைதி நிரம்பிமிளிர்கின்றன. நம் நாட்டில் அம்முறையைக் கையாடல் வேண்டிச் சிலர் புனைகதைகள் எழுதுகின்றனர். அவற்றுட் பெரும்பான்மையை மக்களின் ஒழுக்கக்கேடுணர்த்தும் பொருண் மொழி புணர்த்தலில் அமைந்தனவாயினும், அம்மொழிகட்குரிய சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமுமின்றி, வழுவெல்லாம் நிறைந்து உலவுகின்றன. ‘முருகன்’ என்னும் கதை நூலொன்று இவ்வாண்டில் சென்னைப் பல்கலைக் கழக வகுப்பிற்குப் பாடமாக அமைந்துள்ளது. அதன்கண் மக்கள் வாழ்வு பெறுவதும், நடைப்பிறழ்ச்சியால் கேட்டிற்குள்ளாகி வருந்துதலும், உழவுத் தொழிற்கு வேண்டும் பொருண் மொழிகளும் நிறைந்திருக்கின்றன. மற்று, அதன் சொன்னடை மிகத் தாழ்ந்த நிலையில் உளது. நூலெழுதப்புகுவோர்.

“Plutarch’s aim was much less to tell a story than as he says ‘to decipher the man and his nature’ “ - Studies in Literature P.66.