பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

செம்மொழிப் புதையல்


புன்மனத் துண்மையோ அரிதே; அவரும்
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்போடு
எம்பா டாதல் அதனினும் இலமே’

என்று சான்றோர் கூறுவதால் இனிதறியலாம்.

மணவாழ்க்கை இயலில் மகளிர் இவ்வாறு இரு வேறு வகையில் இயன்று வாழ்ந்தனராயினும், இயல் இசை கூத்து முதலியவற்றிலும், அறிவு அரசியல் முதலிய துறைகளிலும் ஒத்த உரிமை கொண்டிருந்தனர். அதனால் அரசியற் குறிப்புகளும் அறிவு நிலைபெற்ற இலக்கியங்களும், தமிழ் மகளிரின் சால்பினை ஒரு வேற்றுமையும் தோன்றாதவாறு குறித்துள்ளன. ஒளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், வெண்ணிக் குயத்தியார், நப்பசலையார் எனப் பல மகளிர் நல்லிசைப் புலமைத் துறையில் சிறப்புற்று விளங்குகின்றனர். ஒளவையாரும், நச்செள்ளையாரும் அரசர்கட்கு அரசியற் சுற்றமாயிருந்து அறிவுரையும் அறவுரையும் நல்கியுள்ளனர். -

மகளிர்க்குரிய இச் சிறப்பும் உரிமையும் கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரையில் இருந்துள்ளன. அக் காலத்தே வடவார்க்காடு மாவட்டத்துப் படைவீட்டுத் தலைநகராகக் கொண்டதொரு சிற்றரசு சிறந்து நின்றது. அவ் வரசினர் தம்மைச்சம்புவராயர் என்று குறிப்பர்; அவர்கள் சோழப் பேரரசின் கீழ்ப் பெருமை பெற்றவர். அவருள் எதிரிலிச் சோழ சம்புவராயன் என்பவன் ஆட்சிக் காலத்தில் வந்தவாசிக்கு அண்மையில் உள்ள தெள்ளாறு என்ற ஊரில் கண்டன் இளங்கண்ணன் என்பவன் வாழ்ந்துவந்தான். அவனுடைய மனைவி கருணையாட்டி கற்பால் தான் வாழும் ஊரவர் தன் குடியைப் புகழுமாறு வாழ்ந்து வந்தாள். இளங்கண்ணன் ஒரு நாள் கட்குடியால் அறிவு மயங்கி ஊரவர் பலரை வைதான் என்று குற்றங்கண்ட “மகாசபையார்" ஊர்வாரியத் தலைமைபூண்ட கருணையாட்டிக்கு முறையிட, அவர் “கணவனென்றும் பாராது ஏழுநாள் திருமூல நாயனார்க்கு விளக்கேற்றுமாறு" பணித்து, அதனை "அவன் பெண்டாட்டி என்ற பரிசு முட்டாமே


1. நற். 330,