பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
190
செம்மொழிப் புதையல்
 


நாணயமாகவும் ஒழுங்காகவும் செய்வது தான்

உண்மையான வாணிகம்; இது பற்றியே, பொதுமக்கட்குச் செய்யும் தொண்டுகளில் தலைசிறந்தது வாணிகம் என

அறிஞர் கூறுகின்றார்.

இந்த “நான்கு மந்திரமும் உரிமைகொண்டு வாழும் உலக நாடுகளில் வணிகர் சமுதாயத்தில் நன்கு பரவியிருப்பத்ால், அந்த நாடுகள் செல்வமும் புகழும் சிறப்புறப் பெற்றுத் திகழ்கின்றன. நமது நாட்டு வணிகர்களும், வாணிகம் என்பது பொதுமக்கட்குச் செய்யும் பெரிய தொண்டு என்பதை அறிய முடியாத பேதை களல்லர்; அதனால் அவர்கள் இந்த ‘நால்வகை மந்திரங் களையும்’ கற்று நடைமுறையில் தவறாமல் கையாளுவார் களானால் சிறப்பும் செல்வமும் பெற்று மகிழும் ஏனைய நாடுகளைப் போல நமது நாடும் பொருளும் புகழும் பூத்துப் பொன்னாடாய்ப் பொற்புமிகும் என்பதற்கு ஐயமேது?