பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

செம்மொழிப் புதையல்



பணி மேற்கொண்ட நாட்டவரும் பிறரும் மீண்டும் ஒருங்கு கூடி 'கோவிராச கேசரி வன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு கூம்சு -வது (முப்பத்தாறாவது) இரட்டபாடி கொண்ட சோழ வளநாட்டு நாட்டோம். திருநலக் குன்ற முடைய மகா தேவர்க்கு இந் நாட்டுப் பிரமதேயம் காப்புக்குடி, கிராஞ்சி மலை கிழிய நின்றான் திருமலை சகஸ்ரனும், வேத கோமபுரத்து அருளாளன் சகஸ்ரனும் இவ் விருவரும் இந் நாட்டில் வந்திறங்கின வெற்றிலைக்குத் தரகு கொண்டு முப்பத்தாறாவது முதல் இத் தேவர் அடைக்கா யமுதுக்கு ஆட்டு (ஆண்டு) முப்பதினாயிரம் பாக்கும் வெற்றிலைக் கட்டு எழு நூற்றைம்பதும் இவ் விருவரும் இவர்கள் வர்க்கத்தாருமே சந்திராதித்தவல் (சந்திராதித்தர் உள்ள வரையில்) இடக்கடவராகவும். இது நாட்டோமும் மூன்று படைப் பொற் கோயில் கைக்கோளரும் இந் நாட்டுப் படை பழியிலி ஐஞ் நூற்றுவருமே இது நிலை நிறுத்தக் கடவோமாகக் கல் வெட்டுவித்தோம் (P.S. No. 125) என்று திருநலக் குன்ற முடையார் கோயில் முன் மண்டபத்துக் கீழ்ப்புறச் சுவரில் கல் வெட்டுவித்தனர்.

இவ் வேற்பாட்டின்படி இரண்டாண்டுகள் கழிந்தன. சகஸ்ரர் இருவருக்கும் முன்னர் இருந்த சிறப்புப் பண்டு போல் உண்டாகவில்லை; வருவாயும் குறைந்தது. புதியராய்த் தோன்றிய வணிகருள் சிறுத் தொண்ட நம்பி யென்பான், தான் முன்னர் நிகழ்ந்த உடன்படிக்கையில் கலந்து கொள்ளாதது பற்றித் தனக்குள்ளே வருத்த முற்றான். கைக் கோளர் தலைவரும் பழியிலித் தலைவரும் சொன்னதை ஏற்காது போனது பெருங் குறையாகத் தோன்றிற்று. பின்பு ஒரு நாள் அவர்களைக் கண்டு தன் கருத்தைத் தெரிவித்தான். அவர்கள் நாட்டுத் தலைவர்களுக்குத் தக்க முறையிற் சொல்லிச் சிறுத்தொண்ட நம்பியின் வேண்டுகோளை ஏற்குமாறு செய்தனர். சோழ வேந்தன் ஆணைபெற்று, தானைத் தலைவரும் நாட்டவரும் கூடித் திருமலை சகஸ்ரனையும் அருளாளன் சகஸ்ரனையும் வருவித்து ஆராய்ச்சி செய்தனர். திருநலக் குன்ற முடையார்க்குச் செலுத்த வேண்டு மளவிற் செம் பாகத்தைச் சிறுத் தொண்ட நம்பி ஏற்றுக் கொள்வது தக்க தெனத் துணிந்தனர். சிறுத்தொண்ட நம்பியும் அதற்கு இசைந்தான். பின்பு, முன்பு கல் வெட்டின