பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

195


திருமலையும் அருளாளனும் இவ்விருவரும் செம் பாகமும், தாமோதரன் சீகிருஷ்ணனான சிறுத் தொண்ட நம்பி செம் பாகமும் கொண்டு திருநலக் குன்றத்திலே இருந்து பரிமாறித் திருநலக் குன்றமுடையார்க்கு இப்படியா லுள்ளது செலுத்தக் கடவார்களாக' என முன்பு வெட்டின கல் வெட்டின் கீழ் பொறித்தனர்.

இது நிகழ்ந்த சில ஆண்டுகட்குப் பின் வெற்றிலைப் பாக்கின் விலை உயர்ந்தது. அதனால் திருமலை முதலிய தரகர்கட்கு வருவாய் மிகுந்தது. ஆகவே, நாட்டில் முன்னர் நிகழ்ந்தது போன்ற பூசல்கள் உண்டாதற் கேற்ற குறிகள் வணிகரிடத்தே உண்டாயின. நாட்டுத் தலைர்கள் அவற்றை முன்னறிந்து ஆராய்ந்து தரகு விகிதத்தை உயர்த்தக் கருதினர். அவர் கருத் தறிந்த வேந்தன் முதற் குலோத்துங்கன், தனது ஆட்சியின்சயஅ - ஆம் ஆண்டு முதல் (நாற்பத்தெட்டாம் ஆண்டு முதல்) உயர்த்துக் கொள்க என்று ஆணை யிட்டான். மிக்குவரும் வருவாய்க்குச் செலவினமும் கண்டு, நாட்டவர் கூடி, வெற்றிலைத் தரகர் மூவரையும் கூட்டி, 'இக் கல் வெட்டுப் படியுள்ள அடைக்கா யமுதும் இலை யமுதும் இடக் கடவார் திருமெய்ப் பூச்சுக்கு சயஅ-வது முதல் திங்கள் ஒன்றுக்கு ஐந்து திராமமாக ஆண்டுக்கு அறுபது திராமம் இறுக்கக் கடவார்களாகக் கல் வெட்டுவித்தோம்’ என்று முடிவு செய்து வேந்தற்குத் தெரிவித்தனர். வணிகர் மூவரும் அவ்வாறே செய்து வருவாராயினர். கோனாட்டில் வெற்றிலை வாணிகத்தில் குழப்பமும் கலகமும் இலவாயின.

நிற்க, மேலே கூறிய திருமலை சகஸ்ரனும் அருளாளன் சகஸ்ரனும் கோனாட்டில் இருந்து வாணிகம் செய்து பெருஞ் செல்வத் தலைவர்களாய் விளங்கினர். ஏனை வணிகர் பலரும் இவ் விருவர்க்கும் அடங்கியே இருந்தனர் ஆயினும், பொன்னாசைமக்களைச்சும்மா இருக்கவிடாதன்றோ? திருமலையும் அருளாளனும் ஒருவரின் ஒருவர் மிக்க செல்வம் ஈட்ட விரும்பித் தம்மிற் போட்டியிட்டு மாறுபடுவாராயினர். ஈர் பேனாகிப் பேன் பெருமாளாயிற் றென்பது போல, இம் மாறுபாடு முறுகிப் பெருகிப் பெரும் பகையாய் முற்றிவிட்டது. இரு வரிடையேயும் போரும் பூசல்களும் மிகுந்தன. இருவருடைய