பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

செம்மொழிப் புதையல்


பேச்சுரிமையாகும். நெறியில் நிற்கும் போது நில்லாதார் செய்யும் நீர்மை யற்ற செயல்களை எடுத்தோதித் திருத்துவதற்கும் நெறியிடையுண்டாகும் இடையூறுகளையும் இடையீடுகளையும் எடுத்தோதி விலக்குதற்கும், நலங்களை எடுத்தோதிப் பாராட்டுதற்கும் பேச்சு நிகழும். அவ்வாறு நிகழும் பேச்சுக்களை வழங்குதற்கு ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் உரிமை யுண்டு. அப்பேச்சுரிமை யில்லாத வாழ்வு உரிமை வாழ்வாகாது.

கடவுள் ஒருவர் உண்டென்றும், அவரை வழிபடுவது கடனென்றும் கருதி அவரவரும் வேறு வேறு சமய நெறிகளை வகுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் சமய நெறிகளும் பலதிறப்படுகின்றன. அவர்களுக்கு அந் நெறியில் வழிபட்டு வாழ வுரிமை யுண்டு. இது வழிபாட்டுரிமை. அவ் வுரிமையைக் கெடுத்து, யாவரும் ஒரு நெறியையே கடைப்பிடிக்க வேண்டுமென வற்புறுத்தி நிறுத்துவது உரிமை வாழ்வுக்குப் புறம்பானதாகும். அவரவர்க்கும் தாம் தாம் மேற்கொண்டொழுகும் வழிபாட்டுச் சமய நெறியைப் பிறர்க்கு எடுத்தோத உரிமை யுண்டு. பிறரைத் தம் நெறியைக் கைவிடுமாறு வற்புறுத்துவது உரிமைப் பணியாகாது.

உடைமைக்கும் உடையவனுக்கும் உள்ள உரிமையால், உடைமையின் பயனை உடையவன் நுகர்தற்கண் அவனுக்கு அச்சமுண்டாதல் கூடாது. உழைப்பவனுக்குத் தன் உழைப்பால் விளையும் பயனை நுகர்தற் குரிமை யுண்டு; அந் நுகர்ச்சியில் அவனுக்குத் தடை யுண்டாகுமோ என அச்ச முண்டாதல் கூடாது. இவ் வகையால் அவரவர் உரிமையில் கேடுண்டாகுமோ என அஞ்சும் அச்சம் உரிமை வாழ்வுக்குத் தீதாகும். இம் முறையில் அரசியல் முறைகளும், அவற்றைச் செயற்படுத்தும் வினையாளர்களும் மக்கட்கு அச்சம் பிறவாத வகையில் அமைவதே அச்சம் இல்லாமை யாகும்.

உரிமை வாழ்வுடைய நாட்டில் வறுமை யுண்டாகுமானால், அஃது அவ் வுரிமையை யழித்து நாட்டைச் சீரழித்தவிடும். ‘நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு’ என்றதும் இக் கருத்தையே வற்புறுத்துகிறது. வறுமையறவே இல்லாத உரிமை வாழ்வில், ஒரு வேலையும் இன்றிச் சோம்பித் திரிபவர் இல்லையாவர்; அவரோடு, உழைப்பார்