பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
209
 

சோழருக்கே உண்டென்பது பெறப்படும். இவ்வகையால் மூவேந்தர்க்கும் அடிக்கடி போருண் டாயினவெனக் கொள்ளலாம். போர்த் துறையில் ஊர்களைச் சூறையாடுதலும் எரிபரந்தெடுத்தலும் உண்டு. இவ்வகையால் உயிர்க்கேடும் பொருட் கேடும் மிகுதல் முறை. இதனால் மக்கட்கு அச்சம் பெரிதாம். அரசியலில் உரிமைபெற்ற சான்றோர் வேந்தர் கருத்துக்கு இயைய வேண்டுவனவற்றைச் சூழ்ந்துரைப்பாராயினும், போரால் நேரும் கேடுகளை அவர்கள் உணராமல் இருந்ததில்லை. போர் முடிவில் வெற்றி பெற்ற வேந்தர்க்கு அப்போரால் நிகழ்ந்த கேடுகளை ஓவியம்போற். காட்டிப் போர்மேற் செல்லும் அவர்கள் உள்ளத்தை மாற்ற முயன்றதும் உண்டு.

‘பாடல் சான்ற பயங்கெழு வைப்பின்
நாடுகவின் அழிய நாமம் தோற்றிக்
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
உள்ளம் அழிய ஊர்க்குநர் மிடல்தபுத்து
உள்ளுநர்ப் பனிக்கும் பாழா யினவே,’

என்றும்,

‘அழல்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப
அரிநர் கொய்வாள் மடங்க, அறைநர்
தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன் றோர்காலை
நல்லமன் அளிய தாம்எனச் சொல்லிக்
காணுநர் கைபுடைத் திரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே’

என்றும் எடுத்தோதியிருப்பது அவரது உரிமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.

போரில் படையேந்தி நின்று வெற்றிபெற விரும்பும் மறவர் உயிர் கொடுத்தற்கு அஞ்சுவது கிடையாது. அஞ்சாமை யல்லது துணை பிறிதின்றி நின்று விளக்கமுறும் விரனொருவன் மனைவியைக் கண்ட பெருந்தலைச் சாத்தனார், நின் கணவன்