பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
242
செம்மொழிப் புதையல்
 


- ---------

இங்ஙனம் கரிகாலன் மாண்பும், அவனுடைய காவிரிப்பூம்பட்டினத்துச் சிறப்பும் கவினுற எடுத்தோதும் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குக் கரிகாலன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் நல்கினான் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகிறது. கல் வெட்டொன்றும் அதனை வற்புறுத்துகிறது. கடியலு ரென்பது இவர தூர். உரத்திரன் என்பது இவர் தந்தை பெயர். கண்ணன் என்பது இவரது இயற் பெயர்.

இனி, சேரமான் பெருஞ்சேரலாதனும் பாண்டி வேந்தன் ஒருவனும் வேளிர் பதினொருவரோடு கூடிப் பெரும் படையொடு வந்து, வெண்ணியிடத்தே, பொருது கரிகாலனுக்கு ஆற்றாராய்க் கெட்டபோது, சேரமான் பெருஞ்சேரலாதன் பொருது, புண்பட்டு, மானம்பொறாது, அவ் வெண்ணியிடத்தே வாள் வடக்கிருந்து உயிர் துறந்துபோது, அந் நிகழ்ச்சியை நேரிற் கண்ட சான்றோர் வெண்ணிக் குயத்தியா ராவர். அக் காலத்தே கடலில் அடிக்கும் காற்றைப் பயன்கொண்டு கலஞ் செலுத்தும் விரகினை முதற்கண் கண்டவர் சோழர் என்றும், அச் சோழர் வழிவந்தவன் கரிகாலன் என்றும் புக முண்டாகியிருந்தது, கரிகாலனொடு பொருது தோற்ற முடிவேந்தர் இருவருள் பாண்டியன், வெற்றியும் தோல்வியும் ஒருவர்க்கே புரியவல்ல; வென்றி யெய்தினோர் தோற்றலும், தோற்றோர் வெற்றி யெய்துதலும் மாறி வருவது இயல் பென்று தெளிந்து, தன் னாட்டிற்குச் சென்றது போலாது, மார்பிற் புற்ைத் துருவி முதுகிற் புண்ணுண்டானதற்கு நாணிச் சேரலாதன் தான் தோல்வி பெற்ற போர்க்களத்தின்கண்ணே வாள்வடக்கிருந்து உயிர் துறந்ததும், அது கேட்ட அவனுடைய தானைச் சான்றோர் சிலர் உயிர் துறந்ததும் சிறந்த மற நெறியாகத் தோன்றாமை கண்டார். மறத்தின் நீங்கா மானமாவது தன்னை வென்றோனைக் காலங் கருதியிருந்து, வாய்த்தவுடன் அவனை வென்று விளங்குத லாகும்; இதனை யுணரர்து வடக்கிருந்த சேரலாதன் கரிகாலனைவிடச் சிறந்தவனாதல் இல்லையென அவன் உள்ளந் தெளியுமாறு வற்புறுத்தினார், அதனை, -

‘நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவோன் மருக! களியியல் யானைக் கரிகால் வளவ! சென்றமர்க் கடந்த நின்னாற்றல் தோன்ற