பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

செம்மொழிப் புதையல்



கழாத்தலையார் சேர மன்னர்களில் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும், பெருஞ்சேரலாதனையும் பாடியிருத்தலினாலும், ஏனை வேந்தர்களைப் பாடினா ரெனற்கு வேண்டும் இவர் பாட்டுக்கள் தொகை நூல்களுட் காணப் படாமையாலும், இவர் சேர நாட்டின ரெனக் கருதற்கு இடமுண்டாகிறது. கையெழுத்தப் பிரதியொன்றில் இவர் பெயர் கழார்த்தலை யெனக் காணப்படுகிறது. அதுவே உண்மைப் பாடமாயின், இவர் கழார் என்னும் ஊரினராக எண்ணலாம். அக் கழாரும் சேரநாட்டு ஊராதலும் கூடும். -

நக்கீரனார், பரணர், மாமூலனார் ஆகிய மூவரும் சோழன் கரிகாலனை நேர்முகமாக வைத்துப் பாடினாரில்லை. ஆயினும், அவர்கள் தாந் தாம் அவ்வப்போது பாடிய பாட்டுக்களில் ஒவ்வோரிடத்தில் கரிகாலனைக் குறித்துப் பாடியிருக்கின்றனர். தலைவன் தனக் குரிய வினை குறித்துப் பிரிந்து சென்றானாக, .” தலைவி அவன் பிரிவாற்றாது உடல் மெலிந்து வருந்துவளோ என அவள் தோழி நினைந்து கவலையுற்றாள்; அது கண்ட தலைவி, தோழி! 'செல்வம் கொணரச் சென்றுள்ள நம் காதலர் வினைகுறித்துப் பிரிவதற்கு யான் வருந்தவில்லை; கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் மறுகு விளக்குறுத்து மாலை நாற்றிச் செய்யும் விழாவுக்கு வந்துவிடுவாராயின் நன்று. என்று கூறுகின்றாள். அவள் கூற்றைப் பாடிக்காட்டும் நக்கீரர் கரிகாலனைச் சிறப்பித்து, செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால், வெல்போர்ச் சோழன் இடையாற் றன்ன, நல்லிசை வெறுக்கை தருமார்' (அகம். 141) என்று பாடியுள்ளார்.

தலைவன் பரத்தையொடு கூடிப் புனலாடி வந்தானாக, அவனுக்குத் தோழி வாயில்மறுப்பவள், 'நீ பரத்தையொடு புனலாடினாயென்று சொல்லுகின்றனர்; அதனை நீ மறைத்தாலும் ஊரில் உண்டாகிய, அலர் பெரிது.' என்கின்றாள். அவள் கூற்றைப் பாடிக்காட்டும் பரணர், கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் சேர பாண்டிய இருவரும் வேளிர் பதினொருவரும் தொலைந்து கெட வென்றதனால், அவனுடைய அழுந்துரார் வெற்றி விழாக் கொண்டாடி யெடுத்த ஆரவாத்தினும் பெரிது அந்த அலர் (அகம். 246) என்று பாடியுள்ளார். மேலும், பரணர் கரிகாலனுடைய வெண்ணிப்-