பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
247
 


ஈடுபடச் செய்யும் பகை வேந்தருடைய நாடு நல்ல நீர் வளம் பொருந்தியது. தண்புனல் பரந்து வந்து வயலிடத்து மடையை

உடைக்குமாயின், அந்த உடைப்பை மண்பெய்து அடைத்தால் .

அடைபடாமை காணும் உழவர் நீரில் மேயும் மீன்களைப் பிடித்து உடைப்பி லிட்டு மண்ணிட்டு அடைப்பர். இத்துணைப் பெரும் பயன் விளைவிக்கும் நாடு, இர வென்றும் பக லென்றும் எண்ணாமல் ஊர்களைத் தீக் கிரையாக்கி ஊரவர் வாய்விட்டரற்றி யெழுப்பும் அழுவிளிக்கம்பலை மிக்கெழச் சூறையாடுதலை விரும்புகின்றாய்’ என்ற கருத்தமைய,

களிறுகடைஇயதாள் கழலுரீஇய திருந்தடிக் கணைபொருது கவிவண்கையால் கண்ணொளிர் வரூஉங் கவின் சாபத்து மாமறுத்த மலர்மார்பின் தோல்பெயரிய எறுழ்முன்பின் எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை யாகலின் நல்ல இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ! தண்புனல் பரந்த பூசல்மண் மறுத்து மீனிற் செறுக்கும் யாணர்ப் பயன்திகழ் வைப்பிற் பிறர்அகன் றலைநாடே!

என்ற பாட்டைப் பாடினார். கரிகாலன் அவர்க்கு முற்றுட் டாகச் சில ஊர்களும் பொருளும் நல்கினான் என உணர வேண்டியவர்களாக நாம் உள்ளோம். ஏனெனில், கரிகாலன் தன்னைப் பாடி வரும் புலவர், பாணர் பொருநர், முதலியோர்க்கு நல்ல பல ஆர்களையும் அவ் வூர்களையுடைய நாடுகளையும் தருபவன் என்பதை முடத்தாமக்கண்ணியார் கூறியிருப்பது காண்க. . *

பின்னர், சோழன் கரிகாலன் பாண்டி நாட்டினின்றும் நீங்கித், தன் சோழ நாட்டிற்குச் சென்று சில ஆண்டுகள் கழிந்த பின் விண்ணுலகம் சென்றான். இதற்கிடையே ஆதனார்க்கும் கரிகால் வளவனுக்கும் நட்பு மிகுந்தது. அவன் இறந்த செய்தி கேட்ட ஆதனார் சோழநாடு சென்றார். கரிகாலன் இல்லை. அவன்