பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
254
செம்மொழிப் புதையல்
 


தொல்காப்பிய நூலுட் காணப்படாத பாட்டினங்கள் இவர்கள் செய்த செய்யுளியல்களிற் காணப்படுகின்றன. இவ்வாறு பழைய தமிழ் நெறிகளைப் புதுநெறியிற் கொணர்தற்கு முயன்று பெருந்தொண்டு புரிந்த இப் பெரியோர்கள் இசை, நாடகங்களிலும் தம் கருத்தைச் செலுத்தியிருப்பின் நம் தமிழ் மொழியில் எத்துணையோ இசை நூல்களும் நாடக நூல்களும் தோன்றியிருக்குமே இசை நூல்களுட் சில இவர்களால் இயற்றப்பட்டன என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அதனை உண்மையெனத் துணிதற்குரிய சான்றுகள் கிடைத்தில்.

தொடக்கத்தில் தம் சமய நெறிகளை மக்கட்கு உரைப்பதே பொருளர்க்கிக் கொண்டு தமிழ்நாடெங்கும் திரிந்து சமண் பள்ளிகளையும், சமண் பாழிகளையும் இவர்கள் நிறுவி வந்தனர். அவை யாவும் அறநிலையங்களாக இருந்தனவேயன்றி, அறிவுச் சுடர் வழங்கும் தமிழ் நூல் நிலையங்களாக இல்லாமையால், தேவாரப் பெரியோர்கள் காலத்தில், இவரது தொண்டு இவர்கட்குப் போதிய அரண் செய்யாதாயிற்று. சமயப்போர் நிகழ்ச்சிகளில், இவர்கட்குப் போதிய படையாகக் கூடிய தமிழ் நூல்கள் இல்லை. அதனால் இவர்கள் எளிதில் வெல்லப் பெற்றனர். தமிழிலக்கணங்களாக, இவர்கள் செய்த அவிநயம், இந்திரகாளியம், பரிமாணம் முதலியவை சமய நூல்களாகவோ &B அறநூல்களாகவோ பயன்படவில்லை.

தேவார காலத்தில் இச் சமண முனிவர்களுக் குண்டாகிய தோல்வி இவர்கட்குப் பிற்காலத்தில் அழியாப் புகழைப் பயப்பதாயிற்று. இவர்கட்குத் தம் தொண்டில் இருந்த குறைபாடுகள் நன்கு புலனாயின. தமிழர் கூட்டத்தில் நிலவிய சமய நூல்களைப் பயின்று, அவற்றைப்போல இலக்கியங் களையும், சிறு நூல்களையும் செய்யத் தொடங்கினர். இளஞ் சிறார் முதல் பெரியோர் ஈறாகப் பலர்க்கும் பயன்படத்தக்க தமிழ் நூல்களை இயற்றத் தலைப்பட்டனர். தமிழ்த் தொண்டினைத் தம் சமயத் தொண்டிற்குக் கருவியாகக் கொள்ளும் கருத்தினராகலின், இளைஞர்க்கென இயற்றிய சின்னூல்களிலுந் தம் சமயக் கருத்துகளைப் புகுத்து மிடமறிந்து புகுத்தித் தம் கருத்து முற்ற நினைந்தனர்.

சிறுவர் கற்கும் கணக்கியல் வாய்பாடுகளில், தம் சமயக் கருத்தை நுழைத்தற்கு இடமில்லாமையால், அவற்றிற்குக் காப்புச் செய்யுள் யாத்து, அதன்கண் சமயவுணர்வைப் புகட்டினர்.