பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

செம்மொழிப் புதையல்



கோவிந்தையை மணந்து கூடிக் கூறும் நயப்புரையில், "தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர், தாம்பாற் படுத்த அமுதோ" என்றும், அக்கடல் நாகம் கயிறாகக் கொண்டு கடையப்பட்டதென்பதை சீவகன் காந்தருவதத்தையை மணந்த காலையில், கட்டியங்காரனது ஏவலால், அச்சீவகனை எதிர்த்த வேந்தர் அவனால் அலைப்புண்ட செய்தியை விளக்குதற்கு உவமையாக நிறுத்தி, “அருவரை நாகஞ்சுற்றி ஆழியான் கடையவன்று, கருவரை குடையப்பட்ட கடலெனக் கலங்கி வேந்தர்... உடையலுற்றார்" (௮௱௰௨) என்று கூறுகின்றார்.

இரண்டாவதாக, முருகன் தாமரைப்பூவில் தோன்றியவன் என்றும், அவன் மலைநாட்டுக்குரிய கடவுள் என்றும், அவன் ஏந்திய வேல் வலி சிறந்தது என்றும், அவன் ஆடவரிற் பேராற்றலிலும் பேரழகிலும் மேம்பட்டவன் என்றும் தமிழர் சமயவுலகு கூறிப் பாராட்டி வந்தது. இச் செயல்களைத் திருத்தக்க தேவர், “பூவினுட் பிறந்த தோன்றல் புண்ணியன்” (௩௱௰௬) என்றும், “தாமரை அமரர் மேவரத் தோன்றிய அண்ணல்” (௬௱௯௰௪) என்றும், "மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ" (௲௬௱௰௧) என்றும், "அமருள் ஆனாது, ஒக்கிய முருகன் எஃகம் ஓரிரண்டனைய கண்ணாள்" (௲௨௱௬௰௧) என்றும், “செம்பொற் கடம்பன் செவ்வேலும்” (௲௬௭௯௰௪) என்றும், "கதம்பனே முருகன் வேற்போர்" (௲௬௱௮௰௧) என்றும், "திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன்தான்" (௮௱௰௨) என்றும், “வள்ளல் மாத் தடிந்தான் அன்ன மாண்பினான்" (௲௨௰௬) என்றும், "முந்து சூர்தடிந்த முருகன் நம்பி என்பார்" (௨௲௫௱௪௰௮) என்றும், இவை போலப் பிறவாறும் கூறிச் சிறப்பித்திருக்கின்றார். இவற்றை இடங்கூறி விளக்கலுறின் கட்டுரை விரியும்.

இனி, சிவபெருமானைக் கூறுமிடத்துப் "போகமீன்ற புண்ணியன்" (௩௱௬௨) என்றும், "காரியுண்டிக் கடவுள்" (௬௱௭௰) என்றும், “அறவாழி யண்ணல்” என்றும், பிறவும் கூறியும் பாராட்டுவர். பரமன் கண்ணுதலால் காமனைக் காய்ந்த செய்தி "கண்ணுதற் கடவுள் சீறக் கனலெரிப்பட்ட காமன்" (௲௩௱௰௧) என்பதனாலும், புரமெரித்த வரலாற்றினை, “கடிமதில் மூன்றுமெய்த கடவுள்" (௲௮௭) என்பதனாலும், "கணையெரி யழலம் பெய்த கண்ணுதல் மூர்த்தி யொத்தான்" (௨௲௨௱௪௬) என்பதனாலும், மங்கை பங்கினனாய் நிற்கும் நிலையினை, "பிறையணி யண்ணல் கொண்ட