பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

267


நூறுயாண்டுகட்கு முன் இந்நாட்டிற்குப் போந்த கிரேக்க தூதர் ஒருவர், இந்நாட்டிற் பலவிடங்களுக்குச் சென்றார். அவர் தந்தை 3 à N c N G2 (Dion) என்றும், அவர் பெயர் ஹீலியோ டோரஸ் (Helio dorus) என்றும் கூறுகின்றனர். அவர் ஒரு சமயம் வடநாட்டிலுள்ள திருமால் கோயில் ஒன்றிற்குச் சென்று, அவரை வழிபட்டு, அம்மட்டில் நில்லாது, ஒரு "கோபுரமும்" எடுப்பித்தார். பின்னர், அவர் ஒரு வைணவ பாகவதராய், திருமாலை வழிபட்டு வந்தார். இவரைப் பின்பற்றிப் போந்தவர் பலரும், இவ்வண்ணமே வழிபாடு செய்வது வேற்றுநாட்டு மக்கட்கும் இயைந்ததாகும் என்று கருதினர். இச்செய்தி பேஸ் நகரி (Bas nagar) லுள்ள துணிற் செதுக்கப் பெற்றிருக்கும் கல் வெட்டினால் நமக்குத் தெரிகின்றது.

மகமதிய, சமயத்தினர், நம் நாட்டிற் புகுந்தபோது, இக்கருத்து நம் நாட்டில நிலவியிருந்ததாயினும், இவர்கள் அதனை மேற்கொள்ளவில்லை. இசுலாம் சமயம் கூறும் "அல்லா" திருமாலின் பல்வேறு பிறப்புக்களுள் ஒன்றாம் என்றும், இச் சமய வுண்மைகளை யுலகிற்கு வழங்கியருளிய மகமது பெருமானைத் திருமாலடியாருள் ஒருவரென்றும் கூறி, இந்துக்கள் இவர்களைத் தம்முள் ஒருவராக இயைத்துக் கொள்ள முயன்றிருக்கின்றனர். வடமொழியுள் வல்லுநர், “அல்லோப நிஷத்" என்றொரு நூலை யெழுதி, மகமதிய வேந்தருட் சிறந்தவரான அக்பர் என்ற பெயர் கொண்ட அரசர் பெருமானை, “அவதார மூர்த்தி" என்றும் சொல்லத் தொடங்கினர். ஆயினும், மகமதியர், இவை, தம் சமயக் கருத்துகட்கு முரணாதல் கண்டு, இவற்றை அறவே ஏலாராயினர். அவர்கள், இந்துக்களாற் செய்யப்படும் “சடங்கு"களையும் உடன் பட்டிலர். “பல தெய்வ வழிபாடு செய்பவர் தூயரல்லர்; தூயதல்லாத யாதும் காபாவில் புகுவதும் தீது" என்று குர்ஆன் மொழிவதை அவர் விடாது போற்றினர்.

இவ்வாறு, திண்ணிய சமயவுணர்வினைக் கொண்டிருந்ததனால், இவர்கள், நம் நாட்டிற் புகுந்து குடியேறிய பின்பும், தமது வழக்கம், ஒழுக்கம், பெயர், மொழி என்ற பலவகையிலும் இந்துக்களிற் பிரிந்தே யிருந்து வரலாயினர். ஒரே நாட்டிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த போதும், அவர் இந்நாட்டவரோடு கலப்பின்றியே இருந்தனர். இவ் வேறுபாட்டை நீக்கிக் கலப்பையுண்டு பண்ணும் துறையில் எம்முயற்சியும் பயன்படாது போயிற்று. இந்திய நாட்டிற்புகுந்து குடியேறி