பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46
செம்மொழிப் புதையல்
 


கண்டுகலங்கிய புழுவிற்கு அச்சினைகளையும், அவற்றிற் கெனப் பணிக்கப்பெற்ற உணவையும் நினைத்தொறும் உள்ளம் நெக்குருக, நினைவு தடுமாறலுற்றது. இது இயற்கையே. செத்தாரைக்கண்டு சாவாரும் வருந்துதல் இயல்பன்ற்ே! தாந்தாமும் தம் ஆற்றலறிந்தன்றோ ஒவ்வோர் பணியை ஆற்ற முன் வர்ல் வேண்டும். எண்ணித்துணிக கருமம். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கன்றோ நிற்க, செயக்கடம்பூண்ட பணியை யெவ்வாற்றானும் செய்து முடித்தலும் வேண்டு மன்றோ. இறந்ததனை எண்ணுதலால் இனிப் பயன் யாதேனும் எய்துமோ? மெய்வருத்தம் பார்த்தல், பசிநோக்கல், கண்டுஞ்சல், செவ்வியருமை பார்த்தல், அவமதிப்புக் கொள்ளல் ஆகிய இவற்றைக் கரும்மே கண்ணாயினார் கண்ணாரன்றே. சிறுசினை புரக்கும் பெரும்பணி மேற்கொண்ட புழு ஒருவாறு தேறி, ‘ஐயகோ இவற்றை யான் எங்ஙனம் புரத்தல் கூடும்? இளந்தளிரும் பணி நீரும் எவண் கிடைக்கும்? கிடைப்பினும் யான் எவ்வாறு கொணர்வேன்? இச்சினைக்குட் பிறங்கும் பூச்சிகள் பறக்குந் தன்மைய; யான் அவ்வினத்தைச் சாரேன். இயற்கையான் மாறுபட்டயான் புரத்தற்கு உடன்பட்டேனே! என்னே என் அறிவிருந்தவாறு இவற்றினின்றெழும் பூச்சிகள் சின்னாட்களிற் பறந்தெழுமே, அஞ்ஞான்று யான் அவற்றை எவ்வாறு அடக்குதல் கூடும் ஆ என்ன காரியம் செய்தேன் ஆய்ந்திடும் உணர்வொன்றில்லார் அலமால் இயற்கை அம்மா!’ எனப் பெரியோர் கூறுதல் எத்துணை யுண்மையுடைத்து, ‘ என வீழ்ந்து சோர்ந்து, பின்னர்ச் சிறிது தெளிந்து, ‘இனியான் இங்ஙனம் வருந்துதல் கூடாது. இதனை முன்னரே நன்கு ஆராய்ந்திருத்தல் வேண்டும் விழையாவுள்ளம் விழையுமாயினும்... தற்றக வுடைமை நோக்கி, மற்றதன், பின்னா கும்மே முன்னியது முடித்தல் என்பர் நல்லிசைச்சான்றோர். கழிந்தன பற்றிக் கலங்கு துயருழத்தல் என நலத்திற்கே கேடுதரு மொன்றாகலின், செய்தல் மேற்கொண்ட இப்பணியை, அறிவின் மிக்கார் பொருளுரை கேட்டுத் தக்கன தேர்ந்து செய்வல். இதுவே யான் இனிச் செயற்பாற் றன்றிப் பிறிதொன்று மன்று’ எனத் தேர்ந்து நின்றது. அக்காலை, தேனூண்சுவையினும் ஊனுண் சுவையே உயிரினும் விரும்பிவாழும் பூஞை ஒன்று ஆயிடைப் போதந்தது. கண்டபுழு அதனை யளவளாவித் தான் மேற்செயற்கேற்ற விரகினையறிய