பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

49


கின்றேன். எப்பொருள் எத்தன்மைத்தாயினும், அன்றி யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருளின்கண் மெய்ப் பொருள் காண்டல் கூடும் என்னும் உறுதி நோக்கு (Faith) நின்னுழை யுளதானாலன்றி, என் மொழியின் உண்மைப் பொருள் புலனாகாது. இந் நோக்கின்றிக் கேட்டல் அரங்கின்றி யாடல் புரிவாரது நோக்கினோடொக்கும்.

புழு :- ஆம். சார்ந்ததன் வண்ணமாதலே மனவியல்பு. எந்நோக்கங் கொண்டு எப்பொருணோக்கப்படுகின்றதோ, அந்நோக்கிற் கமைந்தே அப்பொருளுந் தோன்றும். ஒருவனைக் குற்றமுடையனே யெனக்கருதி நோக்குவார்க்கு அவன் குற்றமுடையனாகவும், அல்லனெனக்கருதி நோக்குவார்க்கு அல்லனாகவும் தோன்றல் கண்கூடன்றோ! நிற்க, யான், அவ்வுறுதிநோக்கு உடையேன், வெளிப்படையாகக் கூறின், நீ கூறுமனைத்தையும் கூறியாங்கே நம்புவல். இது உறுதி.

பருந்து:- உறுதியாயின், கூறுவல்: முதற்கண் நீ இவற்றிற்கேய்ந்த வுணவு யாதென நினைக்கின்றனை? நின் உளத்தில் தோன்றுவனவற்றை மட்டிற் கூறுக.

புழு :-(நினைத்து) யாதாகும்? பனித்திவலையும் பைந்தேனுமாம்! ஆ!

பருந்து:- அல்லவே. அவற்றிற்கேற்கு முணவை நீ மிக்க எளிதிற் கொணர்தல் கூடுமே. அன்றியும், அது இவ்வனைத்தி னும் மிக்க அண்மையிற் கிடைத்தற்பாற்றன்றோ!

புழு :- (திகைத்து) என்னருகில், எளிதில், பெறக்கூடியது இம் முசுக்கொட்டையிலை யன்றிப் பிறிதொன்றுமிலையே. பருந்து:-ஆம் ஆம்! நன்று சொன்னாய் நீயே அவ்வுணவை

நன்கு உணர்ந்து கொண்டனை. இம் முசுக்கொட்டை யிலைகடாம் அவற்றிற்குத் தக்கவுணவாவன.

புழு :- (சினந்து) ஏ என்னே நின் மடமை!! இவற்றையன்றோ அது தருதல் கூடாதென வன்புறை செய்தது. முகநகவொன்று மொழிதலும், பின்னர் மற்றொன்று