பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

செம்மொழிப் புதையல்


பிதற்றிய மொழிகட்கும் உளம் வெள்கி, "அதற்கு நீ கூறும் அந்நம்பிக்கையும் உறுதி நோக்கும் என் மாட்டில வெண்பாயோ? என்றது.

பருந்து:- உளவேல், இத்துணை நெடுமொழிகள் பிறக்குங் கொல்லோ!

புழு :- அற்றேல், அவ்வுறுதி நோக்கு என்னுழை யுண்டாதற்கு யான் செய்யக்கடவதென்? அன்பு கூர்ந்து கூறுக.

இங்ஙனம் அமைதிசான்ற வுரையாடல் இடைநிகழுங் காலத்துப் பருந்து சேட்புலம் படர்ந்தது. புழுவும் தன்னைப் பன்முறையும் நோக்கி, அச்சினையிருந்த முருக்கிலையைச் சூழ்வந்து கொண்டிருப்ப, அவ்விலையைத் துளைத்துக்கொண்டு ஏழெட்டுப் பச்சிலைப் புழுக்கள் அங்குமிங்கு மியங்கத் தொடங்கின. அவை யாண்டிருந்து போந்தன? அவை அச்சினைக்கணின்று போந்தனவே! போதரக்கண்ட புழுவின் புந்தியிற் கலக்கமும் மானமுங்கலந்து தோன்றின: கண்ணகன் ஞாலம் கொட்புறல் செய்தது; உடல் சுமந்து நிற்கும் தன்னையே மாயமோ வென்றெண்ணிற்று. பருந்து கூறிய மொழி யொவ்வொன்றும் அதன் உளத்துத் தோன்றிற்று. இன்னணம் பருந்தின் முதலுரை யுண்மையாதல் காண்டலின், மற்றதும் அவ்வாறாதல் கூடுமெனும் துணிபும் உடனெய்திய எய்தலும், அது பட்டபாடு யாராற் கூறப்படுந் தகைத்தாம்!!

பின்னர் நாட்கள் சில சென்றன; பரந்தவில் வுலகிற் றோன்றும் பொருளினானாம் காட்சியறிவைப் பருந்து உடனுடன் புழுவிற் குரைத்தலும், உண்மையாய்தலும் இரண்டிற்கும் மரபாயிற்று. புழுவும் தன்னினங்கட்குத் தனக்கு நேரவிருக்கும் நிகழ்ச்சியையும், அதுவே யவற்றிற்குமா மென்பதையும் அறிவுறுத்தும்; உறுத்தினும், அதனையவை ஏலாதே யொழிந்தன. புழுமட்டிற்றான்றன் மெய்ந்நட்புக்குரிய பருந்துழைக் கண்ட மெய்ப்பொருள் நிகழ்தற் கேற்ற காலம் எய்திற்றாக, பகல்செய் மண்டிலம் பனிக்கடல் முகட்டெழ, பறவை யின்னிசைபாட, சுரும்புந்தேனும் சூழ்ந்தார்ப்ப, கடிக்கமலம் வாய்விள்ள, பூச்சியினம் பொலிவெய்த, புழுவினங்கள் குழீஇ மறுக, இப்புழுவும் பூச்சியாயிற்று; யாக்கையும் காலொடுமிதக்கும்