பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

57


கவினெய்திற்று இயங்கியவுடல் பறத்தல் செய்தது; இருமருங்கும் சிறகுகளெழுந்தன; அவற்றின்கட் பல்வகைய வொளிதெறிக்கும் வண்ணங்கள் தோன்றியழகு செய்தன.

இவ்வண்ணம், அழகுதிகழப் புத்துடல் பெற்றுப் பூந்தேனுண்டு பொலிவுகூர் சுற்றமொடு புரிந்து வாழ்ந்த சேடப் பூச்சி, பின்னர்ச் சின்னாட்களுட்டன் னின்னுயிர் நீங்குங் கால மெய்தலும், எண்ணரு மின்பங்கனிய, “இம் மறுவின்று விளங்கும் மாயிருஞாலத்து, அறிவு வளர்க்குமாற்றா னமைந்த பொருள்கள் மிகப்பலவுள; அவற்றையாய்ந்து கோடலறிவின் கடன்: அதற்கு இன்றியமையாத வுறுப்பாவது உறுதிநோக்கே (Faith). அதனை அதனருளாலே யடையப்பெற்றேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!! இனி எவை வரினும் வருக. யான் விண்ணகம் படர்குவல்" என்றெழுந்து சென்று விண்ணில் மறைந்தது.


* (கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியினின்று வெளிவந்த பஞ்சாபகேசன் என்னும் கையெழுத்துத் திங்கள் வெளியீட்டின்கண் முன்னர் வெளிவந்ததோர் மொழிபெயர்ப்பு. ஆங்கில நூற் கட்டுரைகளுள் அமிழ்ந்து திளைத்த நிலையில் இக்கட்டுரை ஆங்கிலம் தழுவிய தமிழாக்கமாக அமைந்தது) -