பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

61


உழைத்தற்கு இன்றி இறந்தான்" என்றாராம். ஆகவே, உழைப்பின்றிச் சோம்பியிருப்பவன், விரைவில் தன் உயிரை இழக்கின்றான்; அவன் உள்ளத்தே, உயிர்க்குத் தீங்கு செய்யும் தீய எண்ணங்களும் அறியாமையுமே குடிகொள்ளும் என அறியலாம்.

இன்று நாம் அழகிய நகரங்களையும், பெரிய பெரிய மாட மாளிகைகளையும், பசும் கம்பளம் விரித்ததுபோலத் தோன்றும் பரந்த பண்பட்ட வயல்களையும் காண்கின்றோம். காடழிந்து நாடாகியிருக்கிறது; கருங்கடலில் பெருங்கலம் செல்கின்றது; கம்பியின்றியே தந்தி பேசுகிறது; விரைவில், ‘'கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்" என நம் நாவரசர் பாடியதை நாமும் பாடப்போகின்றோம். இவையாவும் உழைப்பின் பயனன்றோ! "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?" எனப் பட்டினத்தடிகள் உரைத்தது உண்மை மொழியன்றோ உழைப்பின்றி உடல் சோம்பி, உயிர் ஒய்ந்து ஒடுங்கியிருக்கும் ஒருவனைப் பாருங்கள் அவன் உள்ளத்தில் ஒளியில்லை. அதனை அவலம், கவலை, கையாறு, அழுங்கல், ஆசை, வெகுளி, அழுக்காறு முதலியன சூழ்ந்து அரிக்கின்றன; அவனும் உருக்குலைந்துமெலிகின்றான். அவனை ஏதேனும் ஒரு தொழிலைச்செய்ய விடுவோம்: உடனே, அவனது உடலும் உயிரும் ஒருப்பட்டு அத்தொழிற்கண் உழைக்கத் தொடங்குகின்றன. அவன் வன்மை முழுவதும் அத்தொழிலை முடித்தற் கண் ஒன்றிவிடுகின்றது. அவன் உள்ளத்தை யலைத்த அழுக்குணர்வுகளனைத்தும் அகலப்போய் எங்கேயோ மறைந்து போகின்றன. அவன் மனிதன், மனிதனாக வயங்குகின்றான். அவனது உள்ளம் பேரொளி விட்டு மிளிர்கின்றது; அவ்வழுக்குணர்வுகள் அவ்வொளியின்கண் புகைந்து எரிந்து புத்தொளி செய்கின்றன. ஆகவே, ஒருவனது உள்ளத்தைத் தூய்மை செய்வதற்கு உழைப்பே சிறந்த மருந்தாக இருக்கிறதென்பது எளிதில் விளங்குகிறது.

நாம் வாழும் இம்மண்ணுலகு ஆதியில் ஞாயிற்றிலிருந்து போந்தது என்றும், அன்றுமுதல் இன்று வரையில் சுழன்று கொண்டேயிருக்கிறது என்றும் நாம் அறிந்திருக்கின்றோம். இதனை இவ்வாறு சுழல்வித்த பரமன் கருத்து யாதாகல் வேண்டும்? இடையறாது சுழலும் சுழற்சியினால் நாம் வாழும் மண்ணுலகு, விண்ணுலகில் வட்டமாக இயன்று, பல விகார