பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நினைக்கத்தக்கது. கல்லூரிக் கல்வியை வேலூர் ஊரிசுக் கல்லூரியில் சில திங்களே பயின்றார்.

இளமையிலேயே தமிழார்வம் பூண்டு, தமிழ்ப்பணியிலேயே தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முனைந்தார். ஆனால், பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை எனும் கூற்று இவர் வாழ்க்கையில் மெய்யாயிற்று. அதனால் திங்களுதியம் பெறும் பணி தேடும் சூழ்நிலை ஏற்பட்டது. அத்தருணத்தில் உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்’ வேலையை விருப்பமில்லாமல் இவர் ஏற்க வேண்டியதாயிற்று. எனினும், அவர் நினைவெல்லாம் தமிழாகவே இருந்தது. அல்லும் பகலும் அன்னைத் தமிழையே எண்ணியிருந்தார். அதனால் அமர்ந்த பணியிலிருந்து நீங்கி தமிழ்ப்பணியிலேயே முழுமையாகப் பங்கு பெற்றார்.

கரந்தையில் தமிழவேள் உமாமகேசுவரன் அரவணைப்பில், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலனார் ஆகியோரிடம் சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள் முதலியன கற்றுத் தேர்ந்தார். மேலும் சைவ சமய மெய்யியற் கல்வியையும் கற்றுத் தெளிந்தார். 1930-ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டம் பெற்றார்.

முதலில், வடார்க்காடு மாவட்டக் கழகப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அப்போது, திருக்குறள், சங்க இலக்கிய வகுப்புகளைத் தொடர்ந்து தம் இல்லத்திலேயே நடத்தினார். இது, தமிழார்வலர்களைப் பெரிதும் கவர்ந்ததுடன், இவருக்குப் பெரும் புகழையும் தேடித் தந்தது. பேரறிஞர் அண்ணா, காஞ்சியிலிருந்து இங்கே வந்து, இந்த இலக்கிய வகுப்பில் பங்கு கொண்டு, ஒளவை துரைசாமியின் பேருரையைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார் என்பர்.

பின்னர், சேயாறென்னும் திருவத்திபுரத்தில் இவர் பணிபுரிந்தபோது, புலவர் கோவிந்தன் ஒளவையிடம் தமிழ் கற்றுப்பின்னாளில் சட்டப்பேரவைத் தலைவராக விளங்கியதைத் தமிழுலகம் நன்கறியும்.

ஒளவை துரைசாமி-உலோகாம்பாள் திருமணம் சிறப்பாக நடந்தது.

இல்லற வாழ்க்கை இனிதே விளங்கியதன் பயனாக மக்கட் செல்வங்களான

திருவாளர்கள் ஒளவை நடராசன், ஒளவை திருநாவுக்கரசு, ஒளவை

ஞானசம்பந்தன், டாக்டர் மெய்கண்டான், டாக்டர் நெடுமாறன், திருமதியார் 5