பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
77
 


பொருப்பினின்றும் இழியும் அருவிக்காலும் நதிகளும் புரண்டு துள்ளா; எப்பொருளையும் தன்வயமாக்கி, உள்நிறை யுயிரும் மெய்யும் உருக்குகின்றதே!’ எனப் புகழ்வது போலும் இழித்தக்க கூறிக்கொண்டே புறவமொன்று ஆண்டு அதனருகே வந்தது. இது புறங்குன்றி கண்டனையதேனும் மூக்கிற் கருமையு முடைத்து; அன்றியும் ஒண்மை யுடையம் யாம் என்னும் வெண்மை தலை சிறந்தது. எக்குடிகெடுக்வோ, எதனலம் தூற்றவோ ஈண்டு இஃது வந்துளது. இதனியல்பறியாச் சிறுசெம்புள், தான் கேட்ட இதன் பொய்யுறு புகழ்ச்சியை மெய்யுறு புகழ்ச்சியென் றெண்ணி, பெரிதும் முயன்று பாடலும், இம்மடப்புறவம், தன் சிறுதலையைப் பையத்துளக்கி, ‘நன்று, நன்று, யானும் பல விடங்கட்குச் சென்றுளேன். பல இன்னிசைகளாற் றோட்கப் பெற்று முளேன். ஒருகால், மக்களகத்துப் போற்றி வளர்க்கப் பெறும் பேறும் பெற்றுளேன். எனவே, இசைநலங் காண்டலிற் சிறந்த வன்மை பெற்றுளேன் என்பது நன்கு தோன்றும். யானறிந்தவளவில், ஆணையிட்டுக் கூறுவேன், நின்னொப்பார் ‘ நல்லிசைவல்லார் மக்களினும் இல்ர். ஆயினும் ஒன்று, நின்னாற் பாடப்பெறும் பொருள்கள் யாவை? அவை யான் இது காறுங் கேட்டனவல்லவே!!’ எனச் சிறிது சுளித்து வினவிற்று.

குறும்புள்:- ஆ. அவை யாவும் அறியாவுலகு பற்றியன. புறவம் :- எவை? அறியா... -

குறும்புள்:- அவை அறியா வுலகின் அழகு, இன்பம், வாழ்க்கையியல்பு, அதனையடையுமாறு முதலியவற்றைக் கூறுவன?

புறவம் :-(நகைத்து) அது அறியாவுலகாயிற்றே! அதனைப் பற்றி நீ அறிந்ததியாங்ஙனம்? அம்மம்ம முற்றாக் காயெல்லாம் முழுத்த கேள்வி வல்லவா யிருக்கின்றன. காடும் செடியும் அவாவறுத்தல் மெய்யுணர்தல் முதலியன செய்கின்றனவே! மெய்யாக, யான் இவற்றை யறிதல் வேண்டும். மூத்து முதிர்ந்த முதுமை மிக்க யான், அவ்வுலகினை யறிந்து ஆவன செய்துகோடல் வேண்டுமே! நன்று! அறியாவுலகமென்று நீ கூறுவது யாது? யாண்டுளது? அருள்செய்து கூறுக. .