பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

செம்மொழிப் புதையல்



குறும்புள்:- யான் அறியேன். (உணர்வுகலங்கி) ஒருநாள் நாங்கள் அவ்வுலகினுக்குச் சேறல்கூடும் என்பதையன்றி வேறு ஒன்றும் யான் அறியேன்.

புறவம் :- நன்று. அறிந்தேன். பேதையோர் பேதையோர் என நூல்கள் கூறுகின்றன. அவர் யாவர், யாண்டுளர் என ஆய்ந்துகொண்டே வருதல் என் இயற்கை. அன்பே இன்று கண்டேன். நின்மாட்டே அந்நூல்களின் கூற்று வாய்மையாதல் கண்டேன். நீயே அதற்குத் தக்க சான்று. ஆகவே, நீவிற் அறியாவுலகிற்குச் செல்லும் செலவு மேற்கொண்டுள்ளீர். ஆற்றுப்படையின்றியே போலும் அப்பெற்றித்தாய செலவு நீ நயந்தனிராயின், நும் நன்னர் செஞ்சத்து இன்னசை வாய்ப்ப, முன்னிய யாவையும் இன்னே பெறுக! யான் வருவல் என்று கூறிக் கொண்டே பறந்து சிறிது செல்ல, அக் குறும்புள், விருதுப்பட்டிக்கு விரைந்து போங் கலியைக் குறுக்கிட்டு உறுவிலை கொடுத்து வாங்கியாங்கு, “நிற்க சிறிது தாழ்த்தல் வேண்டும். நன்று, தாங்கள் கூறியது யாது? என் அறிவு மயங்குகின்றது” என்றது.

புறவம் :- அறியாவுலகத்திற்கு அமைந்துள்ள நூந்தம் செலவு மேதக்கதே. ஆயினும், இடைப்பட்ட எனக்கும் உனக்குமே அச் செலவு செய்தற்கேற்ற நெறி தோன்றாது போலும்.

குறும்புள்:- ஓ, அதனை விடுக. அவ்வுலகுபற்றிய உம்முடைய கோள் யாது? அதனை யேனும் கூறுக.

புறவம் :- என்னை? ஏ துரும்பே! என்னையோ இகழ்கின்றனை. நன்று! உன்னொத்த சீரிய இசைப் புலமையும், நுட்பமும் திட்பமுமமைந்து அறிவுமுடைய எவ்வுயிரேனும் அறியாத ஒன்றின்மாட்டு வெறிதே நினைந்து சாம்புங்கொல் வேண்டின், நீ நின்னையே கொள்ளலாம். உன்னைப்போல், வாளாது பொழுது கழிப்பதாயின் என்னையும் கொள்ளலாம். ஒன்று கூறுவேன்; யாவருக்கும்