பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
91
 


கிடந்தது. ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்.” என்பது தமிழ்மறை. நிற்க, உண்ணுங்காலம் ஆயிற்று. வா, போகலாம்.

சிறுமி :-அண்ணால் சிறிது நில்லுங்கள். யான் இவ்வியை

வெளியே விடுத்துவருகிறேன்.

இங்ஙனம் கூறிக்கொண்டே, அச்சிறுமி தன் கைத்துணியால் அதனைப் பையவெடுத்து அருளொழுக நோக்கி, “அந்தோ ஏ! கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி குழவிப்பருவத்தே உன்னை வளர்த்தோர் உனக்கு உண்டியும் உறையுளும் உயர்ந்தன கொடுத்திருப்பரேல், ஆ1 இன்றுநீயும் ஒரு ஈயரசியாக இருப்பா யன்றோ என்ன இழிந்த நிலையை உனக்கு அவர் தந்துள்ளார்: அறிதியோ? கிடக்க, நீ இனி வெளிச் சென்று, உன்வானாள் முற்றிலும் மெழுகு செய்தலிலும், தேனிட்டலிலும் செலவிடல் வேண்டும். செல்க. செல்க. நீ மேற்கொண்ட சிறுதொழில் சீர்த்தொழிலாமாக!’ என வாழ்த்தி, சாளரத்தின் புறத்தே விடுத்தனள். வெளிப்போந்த வண்டு, கழிபேருவகைகொண்டு தன் வழிச்செல்கை தொடங்கிற்று.

ஆ என்ன இனிய்மாலைக்காலம் காட்சிக்கினியமாலைக் காலம்! காதலர்கூடிக் கலந்துரையாடும் மாலைக்காலம்! இங்கனம் இளவேனிலின் முதுமாலை, மன்னுயிர்க்குப் பேரின்பம் பயந்து இனிதாய்த் தோன்ற, அத்தொழிலிக்குமட்டில் அத்தன்மையின் மாறுபட்டுத் தோன்றிற்று. அதன் மனம் ஏதோ ஒர் பொருளாற் பற்றப்பெற்றுத் துயர்பூண்டிருந்தது; அடிக்கடி அது ஒருவகை யுணர்ச்சியால் நாணி மிக வருந்தத் தொடங்கிற்று. இவ்வாறு வருத்தமும் துயரமும் மயங்கிய உள்ளமொடு அது தன் கூட்டை - பணிசெய்து கிடப்பதே தன்னறமாகும் என்னும் கொள்கையுடன் அன்று காலையில் விட்டுப்பிரிந்த தன் கூட்டை - அடைந்தது. அடைதலும், அடக்கலாகா வெறுப்பும் வெகுளியும் அதன் உள்ளத்துத் தோன்ற, அது தான் கொணர்ந்த தேன்பையை நெகிழ்த்தெறிந்து, மனம் சலிப்படைய, “எல்லாவுயிரினும் கடைப்பட்டேன் யானே காண்’ என அறைந்தது.

அக்காலை, அங்குச் சிறுதொழில் செய்துகொண்டிருந்த - மற்றொரு தொழில் இதனைக் கேட்டு, ‘என்னை செய்தி? என்னே நின் செய்கை யிருந்தவாறு வெறிமிக்க வேங்கையின்